Advertisment

லேப்டாப் எப்படி தேர்ந்தெடுப்பது? என்ஜினியரிங் மாணவர்களுக்கான சிறந்த லேப்டாப்கள் இங்கே

என்ஜினியரிங் மாணவர்களுக்கான சிறந்த லேப்டாப்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Dell launches two new Inspiron 14 models Check price specs and other details

Laptop

லேப்டாப், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் இன்றைய காலத்தில் அத்தியாவசியமாகிறது. கல்வி முதல் அலுவலகம் வரை அத்தனை பணிகளுக்கும் லேப்டாப் அவசியமாகிறது. அந்தவகையில் என்ஜினியரிங் மாணவர்களுக்கு லேப்டாப் பயன்பாடு அதிகம் இருக்கும். அவர்கள் சரியான லேப்டாப் வாங்குவது அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அந்த வகையில், AutoCAD, MATLAB மற்றும் SolidWorks போன்ற சிக்கலான ப்ரோகிராம்கள் பயன்படுத்தப்படும் என்பதால், போதுமான பேட்டரி கொண்ட நல்ல வகையில் இயக்க கூடிய லேப்டாப் வாங்குவது அவசியமாகிறது.

Advertisment

Intel Core i5 அல்லது Core i7 சிப் கொண்ட லேப்டாப், குறைந்தபட்சம் 16ஜிபி ரேம், 32ஜிபி போதுமானதாக இருக்கும். 3D மாடலிங் மற்றும் வீடியோ ரெண்டரிங் போன்றவைகளும் பயன்படுத்தப்படும். அதேசமயம் ஒரு மீடியம் பட்ஜெட் லேப்டாப் குறித்து பார்ப்போம்,

Dell XPS 15 (2022)

Dell XPS 15 மாணவர்களுக்கு சிறந்த லேப்டாப் ஆக இருக்கும். Intel Core i9 12th-gen லேப்டாப் ஆக உள்ளது. 32GB வரை எக்ஸ்பேண்ட் செய்து கொள்ளலாம். 15.6-inch 3.5K OLED ஸ்கிரீன், 2TB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டது. நீண்ட நேர பேட்டரி லைவ் கொண்டது. இருப்பினும் இது விலை உயர்ந்ததாக உள்ளது.

HP Victus 15

HP Victus 15 ஆனது MD Ryzen 7 5800H ப்ராஸசர் கொண்டுள்ளது. 16GB வரை ரேம் எக்ஸ்பேண்ட் செய்யலாம்.
15.6-inch FHD IPS LED ஸ்கிரீன், 1TB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. விலைக்கு ஏற்ப செயல்திறன், கேம் மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம். ஆனால் குறைந்த பேட்டரி லைவ் கொண்டதாக உள்ளது.

Asus ROG Strix SCAR G834JY

இந்த லேப்டாப் 13th Gen Intel Core i9-13980HX ப்ராஸசர் கொண்டுள்ளது. 32 GB DDR5 ரேம், 18-inch ROG Nebula Display கொண்டுள்ளது. 1TB + 1TB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

Google Pixelbook Go

Google Pixelbook Go Intel Core i7 கொண்டது. 16GB DDR4 ரேம், 13.3-inch 4K எல்.சி.டி டச் ஸ்கிரீன், 256ஜிபி எக்போண்டபுள் ஸ்ரோடேஜ், 11 மணி நேர பேட்டரி லைவ், சிறந்த குரோம் புக், பயோமெட்ரிக் லாக்கின் இல்லை, குரோம் ஓ.எஸ் மட்டுமே உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Technology
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment