/indian-express-tamil/media/media_files/2025/04/24/4IgUl78quByTF8IGwEq8.jpg)
1,000 ரூபாய்க்கு குறைவான விலையில் ஏசியா? எப்படி வாங்கலாம்?
நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பல மாநிலங்களில் 40 டிகிரிக்கு மேல் எட்டியுள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு வெயிலின் அதிகமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த அனல் பறக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுப்பட பலர் ஏர் கண்டிஷனர் (ஏசி) பயன்படுத்த தொடங்கிவிட்டனர். மேலும் வெப்பநிலை காரணமாக தற்போது ஏசியின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் அனைவராலும் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை பணம் செலுத்தி ஏசி வாங்கமுடியாது. இதனால் சாமானியர்களுக்கு உதவும் வகையில் 1,000 ரூபாய்க்கும் குறைவாக போர்டபிள் ஏசி ஆன்லைன் தளங்களில் விற்பனையாகிறது. விலை உயர்வான ஏசியிலிருந்து வெளியாகும் குளிர்ந்த காற்றை போலவே இந்த ஏசி மூலம் நாம் குளிர்ச்சியை அனுபவிக்க முடியும்.
சொந்த ஊரை விட்டு வெளியில் வேலைக்காக சென்று தங்கியிருப்பவர்கள் மற்றும் படிப்புக்காக மாணவர் விடுதியில் தங்கியிருப்பவர்கள் என அனைவருக்கும் ஏற்ற வகையில் 1,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் மினி ஏசி விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. போர்ட்டபிள் ஏசி-கள் பார்ப்பதற்கு சிறியதாக இருக்கும். இவை ஒரு நபருக்கு போதுமான அளவு குளிர்ந்த காற்றை வழங்கக் கூடிய திறன் கொண்டவை. தற்போது
இந்த வகை மினி ஏசி மாடல்களை தள்ளுபடியெல்லாம் போக 1,000 ரூபாய்க்கு குறைவாக வாங்கலாம்.
வோஃபி ஆர்டிக் ஏர் அல்ட்ரா மினி ஏசி (VOFFY Arctic Air Ultra Mini AC):
இந்த வகை ஏசிகள் அழகான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதை வெறும் ரூ.985-க்கு அமேசானில் வாங்கலாம். இந்த போர்ட்டபில் ஏசி-யில் ஆன்டெல் ஆர்டிக் ஏர் பியூர் சில் 2.0 என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஏர் கண்டிஷனரை ஆன் செய்தவுடன் சில நிமிடங்களில் குளிர்ந்த காற்றைப் பெற முடியும். ஐஸ் கட்டிகளை வைப்பதற்காக ஒரு கேபினட் கொடுக்கப்பட்டுள்ளது. இது குளிர்ந்த காற்றை பெற உங்களுக்கு உதவியாக இருக்கும்.
EYUVAA மினி ஏசி போர்ட்டபிள் லேபிள் (EYUVAA Mini AC Portable Label):
இந்தப் போர்ட்டபில் ஏர் கண்டிஷனர்கள் ரூ.999-க்கு அமேசானில் கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தும் போது நீங்கள் எந்தவித சத்தத்தையும் உணர மாட்டீர்கள். அந்த அளவுக்கு சத்தமின்றி குளிர்ந்த காற்றை கொடுக்கக் கூடிய வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் சிறிய அளவில் இருப்பதால் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் மாற்றி பயன்படுத்தலாம்.
இந்த வகை ஏசிகள் குறைந்த விலைக்காக பெயர் பெற்றாலும், அதிக விலைக்கு வாங்கும் ஏசி-களுக்கு ஈடாக இவற்றையும் பயன்படுத்த முடியுமா? என்பது அவரவர் பயன்படுத்தும் விதத்தை பொறுத்தது. அதோடு ஒவ்வொரு நிறுவனமும் இதுபோன்ற ஏசி-களை விற்பனை செய்யும் போதே அதன் தரம், நீட்டிப்பு தன்மை மற்றும் குளிரூட்டும் திறன் போன்ற அடிப்படை விஷயங்களை அந்தந்த பொருட்களின் டிஸ்கிரிப்ஷனில் கொடுக்கப்பட்டிருக்கும். இதுபோன்ற விஷயங்களை கவனித்து விட்டு வாங்க வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.