/indian-express-tamil/media/media_files/2025/06/13/lyMw6g27AsDvVxiMToUW.jpg)
சட்னி, மசாலா, ஜூஸ்.. என ஆல் ரவுண்டர்: 750 முதல் 1,000 வாட்ஸ் வரையிலான 3 பெஸ்ட் மிக்சர் கிரைண்டர்கள்!
உங்க வீட்டு மிக்சி பழசாகி விட்டதா! best mixer grinder வாங்க இதுதான் சரியான நேரம். வீட்டிலிருக்கும் பழைய மிக்சி கொஞ்சம் அதிகமாக அரைத்தால் கூட ஓவர்லோடு பிரச்னையால் அடிக்கடி நின்றுவிடுகிறதா? இனி அதை பற்றிய கவலையே வேண்டாம். பட்ஜெட் விலையில் 3 சிறந்த மிக்சர் கிரைண்டர்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம். இவற்றில் 1,000 வாட்ஸ் வரையிலான திறன் கொண்ட மோட்டார்கள் கொடுக்கப்பட்டுள்ளதால் ஜூஸ், சட்னி, மசாலா என பலவற்றையும் சில நொடிகளில் சட்டென அரைத்துவிட முடியும்.
1. சுஜாதா சூப்பர்மிக்ஸ் 900 வாட்ஸ் மிக்சர் கிரைண்டர்:
மோட்டார்: 900 வாட்ஸ், Double Ball Bearing கொண்டது
சுழற்சி வேகம் (RPM): ஒரு நிமிடத்திற்கு 22,000 சுழற்சிகள் (RPM)
தொடர் இயக்கம்: 90 நிமிடங்கள் வரை தொடர்ந்து இயங்கும் திறன்
பெரிய ஜார்: 1.75 லிட்டர் கொள்ளளவு, பாலிகார்பனேட் ஜார்
நடுத்தர ஜார்: 1 லிட்டர் கொள்ளளவு, Stainless Steel
சிறிய சட்னி ஜார்: 400 மில்லி கொள்ளளவு, Stainless Steel
பாதுகாப்பு: அதிர்வுகளைத் தாங்கும் Shock-proof Body
வேகக் கட்டுப்பாடு: 3 வேக அமைப்புகள், விப்பர் (Whipper) பட்டன்
வாரண்டி: 2 வருட உத்தரவாதம்
அரைக்கும் தரம்: நிமிடத்திற்கு 22,000 சுழற்சிகள் என்ற அதிவேகத்தில் சுற்றுவதால், அரைக்கப்படும் பொருட்களின் இயற்கையான மணம் மற்றும் சுவை பாதுகாக்கப்படுவதாக நிறுவனம் குறிப்பிடுகிறது. பயனர்களின் கருத்துப்படி இட்லி, தோசை மாவு முதல் மசாலா பொடிகள் வரை அனைத்தையும் மிக மென்மையாக அரைக்கிறது. சுஜாதா சூப்பர்மிக்ஸ் 900 வாட்ஸ் மிக்சர் கிரைண்டரின் விலை பொதுவாக ரூ.5,400 முதல் ரூ.6,300 வரை விற்கப்படுகிறது.
2. பிரெஸ்டீஜ் ஐரிஸ் 750 வாட்ஸ் மிக்சர் கிரைண்டர்:
மோட்டார்: 750 வாட்ஸ் சக்தி வாய்ந்த மோட்டார்
சுழற்சி வேகம்: ஒரு நிமிடத்திற்கு 20,000 சுழற்சிகள் (RPM) வரை
ஜார்களின் எண்ணிக்கை: 3 ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் + 1 ஜூஸர் ஜார்
பாதுகாப்பு அம்சங்கள்: ஓவர்லோட் பாதுகாப்பு (Overload Protection) ஜார் பாதுகாப்பு பூட்டு (Jar Safety Lock)
வேகக் கட்டுப்பாடு: 3 வேக அமைப்புகள் மற்றும் Incher/Pulse வசதி
பிளேடுகள்: 4 சூப்பர்-திறன் வாய்ந்த துருப்பிடிக்காத எஃகு பிளேடுகள்
வாரண்டி: தயாரிப்பிற்கு 2 ஆண்டுகள், மோட்டாருக்கு 2 ஆண்டுகள்
நடுத்தர பட்ஜெட்டில், அரைப்பது, மசாலா பொடிப்பது, ஜூஸ் போடுவது என அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஒரு ஆல்-ரவுண்டர் மிக்சர் கிரைண்டரைத் தேடும் குடும்பங்களுக்கு பிரெஸ்டீஜ் ஐரிஸ் 750W மிகச் சிறந்த தேர்வாகும். பிரெஸ்டீஜ் ஐரிஸ் 750W மிக்சர் கிரைண்டரின் விலை பொதுவாக ரூ.3,200 முதல் ரூ.4,000 வரை சந்தையில் விற்கப்படுகிறது.
3. பாஷ் ப்ரோ 1,000 வாட்ஸ் மிக்சர் கிரைண்டர்:
மோட்டார்: 1000 வாட்ஸ் சக்தி வாய்ந்த மோட்டார் (100% காப்பர் வைண்டிங்)
தொழில்நுட்பம்: ஸ்டோன் பவுண்டிங் டெக்னாலஜி (Stone Pounding Technology)
சிறப்பு பிளேடு: பவுண்டிங் பிளேடு (PoundingBlade) - மசாலாக்களை இடிப்பது போல அரைக்க
ஜார்களின் எண்ணிக்கை: 4 (மூன்று துருப்பிடிக்காத எஃகு + 1 பிளாஸ்டிக் பிளெண்டர் ஜார்)
பாதுகாப்பு: ஓவர்லோட் பாதுகாப்பு& மூடி பூட்டு (Lid Lock), உறுதியான சக்ஷன் கால்கள்
கட்டமைப்பு: ஏபிஎஸ் பிளாஸ்டிக் உடல் (ABS Plastic Body)
வாரண்டி: தயாரிப்பிற்கு 2 ஆண்டுகள் மற்றும் மோட்டாருக்கு 5 ஆண்டுகள் வரை
இதன் 1000 வாட்ஸ் மோட்டார், மஞ்சள், பட்டை போன்ற கடினமான பொருட்களைக்கூட நொடிகளில் அரைக்கும் திறன் கொண்டது. அதிக சுமையிலும், வேகம் குறையாமல் சீராக இயங்கும். பாஷ் ப்ரோ 1000W மிக்சர் கிரைண்டரின் விலை பொதுவாக ரூ.6,500 முதல் ரூ.7,800 வரை விற்கப்படுகிறது. இது அடிக்கடி இட்லி, தோசைக்கு மாவு அரைப்பவர்கள், பாரம்பரிய முறையில் இடித்த மசாலாவின் சுவையை விரும்பும் உணவகங்கள் மற்றும் வீட்டு சமையல் கலைஞர்களுக்கு பொறுத்தமான தேர்வாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.