ரூ.20,000க்கு கீழ் சிறந்த ஸ்மார்ட்போன் - இந்திய யங் படீஸ் கவனத்திற்கு

Best Smart Phones: நம்முடைய அன்றாட தேவைகளுக்கு நாம் மேலும் மேலும் ஸ்மார்ட் கைபேசிகளையே சார்ந்துள்ளோம். ஸ்மார்ட் கைபேசி வைத்திருப்பது இப்போது ஆடம்பரத்திற்கு பதிலாக ஒரு தேவையாகவே மாறிவிட்டது. GST உயர்வுக்கு பிறகு ஸ்மார்ட் கைபேசிகளின் விலை கணிசமாக உயர்ந்துவிட்டாலும், ரூபாய் 20,000/- க்கு கீழ் வாங்கக்கூடிய நல்ல எண்ணிக்கையிலான ஸ்மார்ட் கைபேசிகள் இப்போதும் கிடைக்கிறது.

நல்ல நிலையில் இயங்கக்கூடிய ரூபாய் 20,000/- க்கு கீழ் கிடைக்கக்கூடிய Realme, Xiaomi (Redmi), Vivo, Poco, மற்றும் Samsung ஸ்மார்ட் கைபேசிகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

Poco X2: Rs 17,499

சீனாவிலிருந்து Redmi K30 ஸ்மார்ட் கைபேசியை rebrand செய்து Poco நிறுவனம் Poco X2 என்று ஒரு புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கைபேசி மாடலில் 6.67-inch 120Hz FHD+ டிஸ்ப்ளே, Snapdragon 730G processor, 64MP quad-பின்பக்க கேமரா setup, 20MP+2MP dual punch-hole முன்பக்க கேமராக்கள், மற்றும் 27W வேகமாக சார்ஜ் செய்ய உதவும் 4500mAh பேட்டரி ஆகியவை உள்ளன. 6GB RAM மற்றும் 64GB உட்புற சேமிப்பு (internal storage) வசதியுடன் கூடிய இந்த ஸ்மார்ட் கைபேசியின் அடிப்படை மாடல் ரூபாய்.17,499/- க்கு கிடைக்கிறது. எங்கள் மதிப்பாய்வில் இந்த கைபேசி இடைநிலை விலையில் கிடைக்கக்கூடிய சக்திமிக்க சாதனமாக திகழ்கிறது.


Samsung Galaxy M31: Rs 17,499

ரூபாய் 20,000/- க்கும் குறைவான விலையில் உள்ள கைபேசிகளில் Samsung’s galaxy M31 ஒரு சிறந்த தேர்வு. எங்கள் மதிப்பாய்வில் இந்த மாடல் கைபேசி பணத்துக்கான மதிப்பை தருகிறது (value for money) என்று கண்டரிந்தோம். இந்த கைபேசி 6.4-inch Super AMOLED ஸ்க்ரீன், Exynos 9611 processor, 64MP quad-பின்பக்க கேமரா setup, 32MP முன்பக்க கேமரா, 15W வேகமாக சார்ஜாகக்கூடிய 6000mAh பேட்டரியுடன் வருகிறது. இந்த மாடல் ஸ்மார்ட் கைபேசியின் அடிப்படை மாடல் ரூபாய் 16,499/- க்கு 6GB RAM மற்றும் 64GB உட்புற சேமிப்புடன் (internal storage) கிடைக்கிறது.

அடுத்ததாக ரூபாய் 17,499/- க்கு வரக்கூடிய மாடல் 6GB RAM மற்றும் 128GB உட்புற சேமிப்பு வசதியுடன் வருகிறது. மேலும் 8GB RAM மற்றும் 128GB RAM உள்ள மாடல் ரூபாய் 19,499/- க்கு கிடைக்கிறது.

Realme 6 Pro: Rs 17,999

இந்த மாடல் கைபேசியில் 6.6-inch 90Hz FHD+ டிஸ்ப்ளே, Snapdragon 720G processor, 64MP quad-பின்பக்க கேமரா setup, 16MP+8MP dual punch-hole முன்பக்க கேமரா, 30W வேகமாக சார்ஜாகக்கூடிய 4300mAh பேட்டரியுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட் கைபேசியின் அடிப்படை மாடல் விலை ரூபாய். 17,999/-. இது 6GB RAM மற்றும் 64GB உட்புற சேமிப்பு வசதியுடன் வருகிறது.

Xiaomi Redmi Note 9 Pro Max: Rs 16,999

Redmi Note 9 Pro Max மாடல் ஸ்மார்ட் கைபேசி 6.67-inch டிஸ்ப்ளே, Snapdragon 720G processor, 64MP quad-பின்பக்க கேமரா setup, 32MP செல்பி கேமரா, 33W வேகமாக சார்ஜாகக்கூடிய 5020mAh பேட்டரியுடன் வருகிறது. இந்த மாடல் கைபேசியின் அடிப்படை மாடல் ரூபாய் 16,999/- க்கு 6GB RAM மற்றும் 64GB உட்புற சேமிப்பு (internal storage) வசதியுடன் வருகிறது.

Vivo Z1X: Rs 16,990


நமது மதிப்பாய்வில் Vivo Z1X மாடல் கைபேசி ஸ்டைல் மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் ஒரு மாடலாக இருக்கிறது. 6.38-inch FHD+ Super AMOLED டிஸ்ப்ளே, Qualcomm Snapdragon 712 processor, 48MP quad-பின்பக்க கேமரா setup, 32MP முன்பக்க கேமரா, 22.5W வேகமாக சார்ஜாகும் 4500mAh பேட்டரியுடன் வருகிறது. இந்த மாடல் ஸ்மார்ட் கைபேசியின் ஆரம்ப விலை ரூபாய் 16,990/- இதில் 6GB RAM மற்றும் 64GB உட்புற சேமிப்பு வசதியும் உள்ளது. மேலும் 6/128GB மாடல் கைபேசியை ரூபாய் 17,990/-க்கும், 8/128GB மாடல் கைபேசியை ரூபாய் 18,990/- க்கும் வாங்கலம்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close