iQOO Z9, போகோ, மோட்டோ, ரியல் மி உள்பட ரூ.10,000 விலையில் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட் போன் ஆப்ஷன்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
iQOO Z9 Lite 5G
iQOO Z9 Lite ஆனது 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 840 nits உச்ச பிரகாசத்துடன் 6.56 இன்ச் HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஃபோன் MediaTek Dimensity 6300 சிப்செட்டில் இயங்குகிறது
இது 6GB வரை LPDDR4x ரேம் மற்றும் 128GB வரை eMMC 5.1 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட் மூலம் சேமிப்பகத்தை 1TB வரை பயன்படுத்த முடியும். 50 எம்.பி ப்ரைமரி கேமரா உடன் இந்த போன் வருகிறது.
4ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் iQOO Z9 Lite 5G அமேசான் தளத்தில் ரூ.10,498க்கு விற்பனை செய்யப்படுகிறது. வங்கி ஆபர் விலையில் ரூ.10,000-க்கும் குறைவாக வாங்கலாம். ப்ளிப்கார்ட்டில் சற்று கூடுதல் விலையில் இந்த போன் விற்பனை செய்யப்படுகிறது.
Poco M6 Pro 5G
Poco M6 Pro 5G ஆனது 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 240Hz டச் சேம்பிளிங் வீதத்துடன் 6.79-இன்ச் FHD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் கொரில்லா கிளாஸ் 3 மூலம் பாதுகாக்கப்படுகிறது. இது Qualcomm Snapdragon 4 Gen 2 SoC மூலம் இயக்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட் போன் ஆனது 50 மெகாபிக்சல் AI சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய பின்புறத்தில் டூயல் கேமரா அமைப்புடன் வருகிறது.
4ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Poco M6 Pro 5G பேஸ் வெரியண்ட் போன் அமேசான் தளத்தில் ரூ.9,499 விலையில் கிடைக்கிறது. ப்ளிப்கார்ட்டில் இதே போன் ரூ.9,999 விலையில் வருகிறது.
Moto G24 Power
Moto G24 Power ஆனது, கிராபிக்ஸ் பணிகளுக்காக Mali G-52 MP2 GPU உடன் இணைக்கப்பட்ட MediaTek Helio G85 செயலியில் இயங்குகிறது. ஸ்மார்ட்போன் 8ஜிபி வரை ரேம் மற்றும் 128 ஜிபி வரை சேமிப்பகத்துடன் கிடைக்கிறது.
பட்ஜெட் ஸ்மார்ட்போனில் 6.56-இன்ச் HD+ IPS LCD டிஸ்ப்ளே 90Hz புதுப்பிப்பு விகிதம் மற்றும் 537 nits இன் உச்ச பிரகாசம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அமேசானில் இந்த போன் ரூ.9490 விலையிலும் ப்ளிப்கார்ட்டில் ரூ.7999 விலையிலும் கிடைக்கிறது.
Realme C53
Realme C53 ஆனது 6.74-இன்ச் 90Hz டிஸ்ப்ளேவுடன் 90.3% ஸ்கிரீன்-டு-பாடி விகிதம் மற்றும் 560 nits உச்ச பிரகாசத்துடன் வருகிறது. திரை 180Hz touch sampling rate வழங்குகிறது. இந்த போன் ARM Mali-G57 GPU மற்றும் 12nm, 1.82GHz CPU வரையிலான ஆக்டா-கோர் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
இந்த போன் டிரிபிள் கேமரா வசதியுடன் வருகிறது.
அமேசானில் - Realme C53 Champion Gold, 6GB RAM, 128GB Storage வெரியண்ட் போன் விலை ரூ.10,398 ஆகும். வங்கி ஆபரில் இன்னும் குறைவான விலைக்கு வாங்கலாம். இதே போன் ப்ளிப்கார்ட்டில் ரூ.10,999க்கு விற்பனையாகிறது.
ரெட் மி 13C
Redmi 13C ஆனது 600 x 720 பிக்சல்கள் ரெசில்யூசன் கொண்ட 6.74-இன்ச் HD+ டிஸ்ப்ளே மற்றும் 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 450 nits உச்ச பிரகாசம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் MediaTek Helio G85 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த போன் டிரிபிள் கேமரா வசதியுடன் ரூ.10,000க்கும் குறைவான விலையில் வாங்க ஒரு நல்ல போனான இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“