நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதிய புதிய செல்போன்கள் சந்தைகளில் களம் இறக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன. வாடிக்கையாளர்களின் தேவையறிந்து நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு புதிய புதிய மாடல்களை அறிமுகம் செய்கின்றன. அதன்படி, ரூ.15,000 க்கு குறைவாகவும், 4000mAh பேட்டரி அம்சமும் கொண்ட மொபைல் போன்கள் குறித்த விவரங்களை இங்கே பார்ப்போம்.
ஹானர் 8C (ரூ.10,999லிருந்து விலை ஆரம்பமாகிறது)
ஹூவாய் ஹானர் பிராண்ட் இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஹானர் 8சி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. ஹானர் 7சி ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடலாக அறிமுகமான ஹானர் 8சி 32 ஜி.பி. மாடல் தற்சமயம் ரூ.1,000 குறைக்கப்பட்டு ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ஹானர் 8சி ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 632 சிப்செட், 4 ஜி.பி. ரேம், 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. வசதிகள், 8 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் 4ஜி வோல்ட்இ, பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் காலக்ஸி M20 (ரூ.10,999லிருந்து விலை ஆரம்பமாகிறது)
கேலக்ஸி M20 ஸ்மார்ட்ஃபோன், 6.2 இன்ச் டிஸ்ப்ளே உடன் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியொ அடிப்படையில் இயங்குகிறது. இதன் விலை 10,990 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. 4ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ், பேட்டரி சேமிப்புத் திறன் 5000 mAh கொண்ட M20 10,990 ரூபாய்க்கு விற்பனையாக உள்ளது.
மோட்டோரோலா ஒன் பவர் (ரூ.15,999)
6.2 அங்குல ஃபுல் ஹெச்.டி மற்றும் எல்.சி.டி மேக்ஸ் விஷன் டிஸ்பிளே கொண்ட போன் இது. இது 19.9 என்ற திரை ஃபார்மெட்டினை கொண்டிருக்கிறது. ப்ரோசஸ்ஸர் ஸ்னாப்ட்ராகன் 636 ஆகும். ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ இயங்கு தளத்தில் இந்த போன் இயங்கி வருகிறது. கிராபிக்ஸ் பிராசசிங் யூனிட் அட்ரெனோ 509 ஆகும்.
4ஜிபி RAM மற்றும் 64 ஜிபி இண்டெர்னெல் மெமரியுடன் வரும் இந்த போனின் பேட்டரி சேமிப்புத் திறன் 5000 mAh ஆகும். ஒரு 15 நிமிடம் சார்ஜ் செய்தாலும் 6 மணி நேரம் வரை இந்த போனை பயன்படுத்த இயலும் என்று மோட்டோ நிறுவனம் கூறியிருக்கிறது. அதிக நேரம் பயணம் செல்பவர்கள், அதிக நேரம் போன் உபயோகப்படுத்துபவர்களுக்கு சரியான தேர்வாக இந்த போன் அமையும்.
முதன்மை கேமராக்கள் இரண்டும் 16 எம்.பி மற்றும் 5எம்.பி திறனைக் கொண்டிருக்கிறது. 4K வீடியோவை நீங்கள் இதன் மூலம் எடுக்கலாம். செல்பி கேமராவின் திறன் 12 எம்.பி ஆகும்.
ரெட்மி நோட் 6 புரோ (ரூ.13,999லிருந்து விலை ஆரம்பமாகிறது)
6.26-இன்ச் Full HD + (2280*1080 பிக்சல்ஸ்) டிஸ்பிளே, 2.5D வளைவு கிளாஸ், அட்ரினோ 509 GPU, 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்பில்ட் மெமரி, 128 ஜிபி வரை விரிவு செய்து கொள்ளலாம். Dual 4G VoLTE, ப்ளூடூத் 5, GPS + GLONASS, 4000mAh பேட்டரி உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் உள்ளன.
ஏசஸ் ஜென்போன் மேக்ஸ் புரோ M2 (ரூ.12,999லிருந்து விலை ஆரம்பமாகிறது)
6.26-இன்ச் Full HD+ (2280 × 1080 பிக்சல்ஸ்) டிஸ்பிளே, குவால்கோம்'ஸ் ஆக்டா-கோர் ஸ்நாப்டிராகன் 660, 3GB/4GB/6GB ரேம் மற்றும் 32GB/64GB வரை விரிவு செய்து கொள்ளலாம், மைக்ரோ SD மூலம் 2TB வரை விரிவு செய்து கொள்ளலாம். 5000mAh battery உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் உள்ளன.
