Jio, Airtel, Vi, BSNL Prepaid Packs Tamil News : ரிலையன்ஸ் ஜியோ தனது ரூ.11 டேட்டா ஆட்-ஆன் பட்ஜெட் திட்டத்தை திருத்தியுள்ளது. இந்த பேக் இப்போது 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த டேட்டா காலாவதியானதும், 64 கேபிபிஎஸ் வரை அதன் வேகம் குறையும். அதே ப்ரீபெய்ட் ஜியோ திட்டம் முதலில் 400MB டேட்டாவுடன் தொடங்கப்பட்டது. பின்னர் இது 800MB-ஆக திருத்தப்பட்டது. அடிப்படை ப்ரீபெய்ட் திட்டம் காலாவதியாகும் வரை இந்த திட்டம் செல்லுபடியாகும்.
ஜியோவில் ரூ.51 ப்ரீபெய்ட் டேட்டா ஆட்-ஆன் திட்டமும் உள்ளது. இது, 6 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ரூ.101 திட்டம் மொத்தம் 12 ஜிபி டேட்டாவை வழங்கும். ரூ.21 ஜியோ ப்ரீபெய்ட் டேட்டா திட்டமும் உள்ளது. இது 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த ஜியோ திட்டங்களின் செல்லுபடியாகும் காலம், அடிப்படை ப்ரீபெய்ட் திட்டத்தைப் பொறுத்தது.
30 ஜிபி டேட்டாவை விரும்புவோர், நிறுவனத்தின் ரூ.151 ஜியோ ஒர்க் ஃப்ரம் ஹோம் (WFH) பேக்கை பெறவேண்டும். இது 30 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. ரூ.201 WFH பேக், 40 ஜிபியை வழங்குகிறது. ரூ.251, 50 ஜிபி டேட்டாவை வழங்கும். இந்த இரண்டு திட்டங்களும் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
ஏர்டெல் டேட்டா ப்ரீபெய்ட் திட்டங்கள்
ரூ.78 ஏர்டெல் டேட்டா பேக்கில் 5 ஜிபி டேட்டா உள்ளது. இது பயனரின் அசல் ப்ரீபெய்ட் திட்டம் காலாவதியாகும் வரை செல்லுபடியாகும். வழங்கப்பட்ட 5 ஜிபி டேட்டா தீர்ந்ததும், அவர்களிடம் எம்பிக்கு 50 பைசா வசூலிக்கப்படும். இந்த திட்டம் ஒரு மாத விங்க் பிரீமியம் சந்தாவையும் வழங்குகிறது. 3 நாட்களுக்கு 3 ஜிபி டேட்டாவை வழங்கும் ரூ.48 டேட்டா பேக்கையும் பெறலாம். ரூ.98 ஏர்டெல் டேட்டா பேக் 12 ஜிபி டேட்டாவுடன் வருகிறது.
அடுத்ததாக ஏர்டெல்லில் ரூ.248 ப்ரீபெய்ட் டேட்டா ஆட்-ஆன் திட்டமும் உள்ளது. இது விங்க் பிரீமியம் சந்தா மற்றும் மொத்தம் 25 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்த பேக்கின் செல்லுபடியாகும் காலம், ஒருவரின் தற்போதைய ப்ரீபெய்ட் திட்டத்தை போன்றது. நிறுவனத்தின் மொபைல் பயன்பாட்டில் இந்த பேக்கை காணலாம்.
ரூ.401 ப்ரீபெய்ட் டேட்டா திட்டத்தில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி மற்றும் 30 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு அணுகலாம். ரூ.251 டேட்டா திட்டம் 50 ஜிபி டேட்டாவை அளிக்கிறது. மேலும், தற்போதைய ப்ரீபெய்ட் திட்டம் காலாவதியாகும் வரை இது செல்லுபடியாகும்.
வோடபோன் டேட்டா ப்ரீபெய்ட் திட்டங்கள்
வோடபோன் பயனர்கள் 28 நாட்களுக்கு 3 ஜிபி டேட்டாவை பெற விரும்பினால், ரூ.49 ப்ரீபெய்ட் டேட்டா பேக்கினை வாங்கலாம். நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் ரூ.98 டேட்டா திட்டமும் அடங்கும். 28 நாட்கள் செல்லுபடியாகும் இந்த பேக் 12 ஜிபி டேட்டாவுடன் வருகிறது.
ரூ.351 வோடபோன் டேட்டா திட்டம் 56 நாட்களுக்கு 100 ஜிபி டேட்டாவையும், ரூ.251 வி பேக் 50 நாட்களுக்கு 50 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த நிறுவனம் ரூ.16 டேட்டா பேக்கையும் வழங்குகிறது. இது ஜியோவைப் போல் இல்லாமல் 1 ஜிபி டேட்டாவை 24 மணி நேரத்திற்கு வழங்குகிறது. ரூ.355 ப்ரீபெய்ட் டேட்டா திட்டம் திட்டத்தில் 1 ஆண்டு ZEE5 பிரீமியம் சந்தா மற்றும் 28 நாட்களுக்கு 50 ஜிபி டேட்டா ஆகியவையை வழங்குகிறது.
பிஎஸ்என்எல் டேட்டா ப்ரீபெய்ட் திட்டங்கள்
பி.எஸ்.என்.எல் ஹோம் எஸ்.டி.வி-யிலிருந்து ரூ.56 ஒர்க் ஃப்ரம் ஹோம் 10 ஜிபி ஆட்-ஆன் டேட்டாவுடன் ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 10 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. 30 நாட்களுக்கு 40 ஜிபி டேட்டாவை வழங்கும் எஸ்.டி.வி 151 திட்டம் இது. 70 ஜிபி டேட்டாவுடன் ரூ.251 மதிப்புள்ள வீட்டு டேட்டா எஸ்.டி.வி இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டம் 30 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.