டாடா ஐ.பி.எல் 2023 இன்னும் 2 நாட்களில் கோலாகலமாக தொடங்க உள்ளது. மார்ச் 31-ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் குஜராத்- சென்னை அணிகள் மோதுகின்றன. மற்ற கிரிக்கெட் போட்டிகளைக் காட்டிலும் ஐ.பி.எல் போட்டிக்கு தனி மவுசு உண்டு. ரசிகர்கள் ஏராளம். இந்நிலையில் இந்தாண்டு ஜியோ சினிமா செயலி மூலம்
போட்டிகளை இலவசமாக பார்க்கலாம். ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் மற்றும் டிவி மூலம் இலவசமாக பார்க்கலாம். எவ்வாறாயினும் இதற்கு அதிவேக வைஃபை நெட்வொர்க் அல்லது அதிக டேட்டா தேவைப்படும்.
இதற்கு வசதியாக ஜியோ, ஏர்டெல் மற்றும் வி.ஐ நிறுவனங்கள் பிரத்யேகமாக தினசரி டேட்டா வரம்பு இல்லாமல் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜியோ ஃப்ரீடம் (Freedom)ப்ளான்: ரூ 299
மிகவும் குறைந்த விலையில் தினசரி டேட்டா வரம்பு இல்லாத ஜியோவின் மாதாந்திர ப்ரீபெய்ட் திட்டம் இதுவாகும்.
ஜியோ ஃப்ரீடம் திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. அன்லிமிடெட் இன்கமிங் மற்றும் அவுட்கோயிங் கால் வசதி உள்ளது. இந்த திட்டத்தில் மொத்தம் 25 ஜிபி 4ஜி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ் வசதியுடன் வருகிறது.
ஏர்டெல்: ரூ 296
ஏர்டெல் ஜியோ
Vi:ரூ 296
வோடபோன் ஐடியாவின் ரூ. 296 திட்டமானது 25ஜிபி 4ஜி டேட்டா அன்லிமிடெட் காலிங், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ் வசதிகளை வழங்குகிறது. இத்திட்டமானது 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. கூடுதலாக இந்த திட்டத்தில் Vi Movies மற்றும் TV ஆப்களை இலவசமாக பயன்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“