ஜூலை மாதத்தில் இந்தியாவில் வெளியான சிறந்த ஸ்மார்ட்போன்கள் பட்டியல்

Honor 9N, Oppo Find X, Vivo Nex , Moto E5 Plus – இதில் உங்களின் சாய்ஸ் என்ன?

Best Smartphones , Best Smartphones of July 2018
Best Smartphones of July 2018

ஜூலையில் வெளியான சிறந்த திறன்பேசிகள் ( Best Smartphones of July )

மீண்டும் ஒரு புதிய மாதம். கடந்த மாத நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில். எப்போதும் ஒன்று அல்லது இரண்டு சிறந்த ஸ்மார்ட்போன்கள் ( Best Smartphones ) மட்டுமே இந்தியாவில் அறிமுகமாகும். ஆனால் கடந்த மாதம் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு பிடித்தமான மாதமாக இருந்திருக்கிறது.

காரணம் கடந்த மாதம் விவோ, ஓப்போ, ஆசஸ், மோட்டோ, ஹானர் என்று பெரிய பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களின் பங்கிற்கு ஒவ்வொரு ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது.

To read this article in English 

ஆசஸ் ஸென்போன் 5Z (விலை – 29, 999) ( Best Smartphones List )

ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ இயங்குதளத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆகும். குவால்க்காம் ஸ்னாப்ட்ராகன் 845 ப்ராசஸ்ஸர் இயங்குகிறது.

கேமரா:  12MP + 8MP என இரட்டை பின்பக்க கேமராக்களையும் 8MP செல்பி கேமராவினையும் கொண்டுள்ளது.

Best Smartphones, Best Smartphones of July 2018

கொரில்லா க்ளாஸ் திரையுடன் கூடிய ஃபுல் எச்.டி திரையுடன் வருகிறது இந்த போன். பேட்டரி பேக்கப் – 3,300mAh ஆகும்.

விலை : 6GB RAM / 64GB இண்டர்னெல் ஸ்டோரேஜ்ஜுடன் கூடிய போனின் விலை 29, 999 ரூபாய் ஆகும். 8GB RAM / 256GB இண்டர்னெல் ஸ்டோரேஜ்ஜுடன் கூடிய போனின் விலை 36, 999 ரூபாய் ஆகும்.

Oppo Find X (விலை ரூ. 59, 990) ( Best Smartphones List )

சிறந்த திறன்பேசிகளின் (Best Smartphones) பட்டியலில் அடுத்த இடத்தில் இருப்பது ஓப்போவின் Find X ஆகும். இந்த ப்ரிமியம் திறன்பேசி 20MP + 16MP என இரட்டை பின்பக்க கேமராக்களையும் 25MP செல்பி கேமராவினையும் கொண்டுள்ளது.

Best Smartphones, Best Smartphones of July 2018

6.4 அங்குல நோட்ச் அற்ற AMOLED திரையுடன் வருகிறது. 8GB RAMமுடன் கூடிய 256GB இண்டெர்நெல் ஸ்டோரெஜ்ஜுடன் வரும் இந்த போனின் விலை 59, 990 ஆகும்.

ஆகஸ்ட் 4ம் தேதியில் இருந்து ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வர இருக்கிறது இந்த திறன்பேசி.

Vivo Nex (Rs 44,990) ( Best Smartphones List )

விவோ நெக்ஸ் ஸ்மார்ட் போன் நோட்ச் இல்லாத ஃபுல் ஸ்கிரீன் டிஸ்பிளேவுடன் வருகிறது. 6.59 அங்குலம் கொண்ட ஃபுல் எச்.டி திரையுடன் வருகிறது. SAMOLED திரை 19.3:9 என்ற ஃபார்மட்டுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

Best Smartphones, Best Smartphones of July 2018
Vivo Nex Review

க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 845 ப்ரோசஸ்ஸரில் இயங்கும் இந்த போனின் ரேம் மெமரி 8ஜிபி ஆகும். இண்டர்நெல் ஸ்டோரேஜ் 128ஜிபி ஆகும். 4000mAh திறன் கொண்ட பேட்டரியுடன் வருகிறது இந்த போன்.

ஆண்ட்ராய்ட் ஓரியோ இயங்கு தளத்தில் இயங்கும் இந்த திறன்பேசியின் விலை ரூ. 44,990 ஆகும்.

மோட்டோ E5 ப்ளஸ் (விலை ரூபாய் 11,999)

6 இன்ச் எச்டி திரை மற்றும் 18:9 ஸ்கிரீன் ஃபார்மெட் கொண்ட இந்த போனினை இயக்குகின்றது ஸ்னாப்ட்ராகன் 430 ப்ரோசஸ்ஸர்.

3GB RAM, 32GB இண்டெர்னல் ஸ்டோரேஜ், 12MP ஸ்மார்ட்போன் பின் கேமரா மற்றும் 8MP முகப்பு கேமராவினைக் கொண்டிருக்கிறது. 5000 mAh கெப்பாசிட்டி கொண்டுள்ள பேட்டரி தான் இதனுடைய சிறப்பம்சம்.

Best Smartphones, Best Smartphones of July 2018

பின்பக்க கேமரா லேசர் ஆட்டோ ஃபோக்கசினையும் முன்பக்க கேமரா செல்ஃபி ஃபிளாஷினையும் கொண்டுள்ளது.

இரண்டு கேமராக்களாலும் முழு எச்.டி வீடியோவினை பதிவு செய்ய இயலும். இதன் விலை ரூ. 11, 999 ஆகும்.

ஹானர் 9N ( விலை 11,999 )

ஹுவாய் நிறுவனத்தின் ஹானர் போன் மிட்-ரேஞ் வகை போன் ஆகும். 5.84 – இன்ச் ஃபுல் எச்.டி திரையுடன் வருகிறது. கிரின் 659 ப்ராசஸ்ஸரில் இயங்கும் இந்த போனில் 3GB / 4GB RAM வேரியண்ட்டுகள் இருக்கின்றன.

Best Smartphones, Best Smartphones of July 2018

13MP + 2MP இரட்டை பின்பக்க கேமராக்களையும், 16MP செல்பி கேமராவினையும் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்ட் ஓரியோ இயங்கு தளத்தில் இயங்குகிறது. பேட்டரி பேக்கப் 3,000mAh ஆகும்.

விலை : 3GB RAM / 32GB இண்டர்னெல் ஸ்டோரேஜ்ஜுடன் கூடிய போனின் விலை 11,999 ரூபாய் ஆகும். 4GB RAM / 128GB இண்டர்னெல் ஸ்டோரேஜ்ஜுடன் கூடிய போனின் விலை 17,999 ரூபாய் ஆகும்.

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Best smartphones of july

Next Story
பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய் கிரகம்… இன்று இரவு நடக்க இருக்கும் அரிய வானியல் நிகழ்வுசெவ்வாய் கோள், பூமி, அரிய வானியல் நிகழ்வு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X