Advertisment

பட்ஜெட் டூ மிட்-ரேஞ்ச் வரை: நோட்ஸ் எடுக்கலாம், படிக்கலாம்: மாணவர்களுக்கான சிறந்த டேப்லெட் இங்கே

நீங்கள் ஒரு மாணவரா? கல்லூரிக்குச் செல்பவரா? குறிப்புகள் எடுக்க, படிக்க ஒரு நல்ல கையடக்க டேப் தேடுகிறீர்களா? மிட்-ரேஞ்ச் வகை டேப்லெட்கள் குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Tabnotes

இப்போது யாரும் நோட் புக் எடுத்து குறிப்பு எடுக்க விரும்புவதில்லை. கல்லூரி மாணவர்கள் முதல் வேலைக்குச் செல்பவர்கள் வரை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் செய்ய விரும்புகின்றனர். அதற்கு சிறந்த ஆப்ஷனாக டேப்லெட் உள்ளது.  கடந்த சில ஆண்டுகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே டேப்லெட்டுகளுக்கான தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. அந்த வகையில், பட்ஜெட் டூ மிட்-ரேஞ்ச் வரையிலான சிறந்த டேப்லெட் ஆப்ஷன்கள் பற்றி பார்ப்போம். 

Advertisment

Lenovo Tab P12

பெரிய ஸ்கிரீன் கொண்ட டேப் தேடுகிறீர்கள் என்றால் Lenovo Tab P12 ஒரு சிறந்த ஆப்ஷனாக இருக்கும். இந்த டேப்  12.7-இன்ச் 3K IPS LCD ஸ்கிரீன் கொண்டுள்ளது மற்றும் Dimensity 7050 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. பெரிய ஸ்கிரீன் இருப்பதால் குறிப்பு எடுக்க, வீடியோ பார்ப்பதற்கு வசதியாக இருக்கும். 

Lenovo Tab P12 ஆனது 8GB RAM மற்றும் 256GB வரை ஸ்டோரேஜ் உடன் வருகிறது. அமேசான் தளத்தில் 26,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

Advertisment
Advertisement

Xiaomi Pad 6

பட்ஜெட் டேப் வரிசையில் அடுத்து இருப்பது Xiaomi Pad 6. இது 1-இன்ச் ஆண்ட்ராய்டு டேப்லெட். 
ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பகத்துடன் வரும் பேஸ் வேரியண்ட் மாடல்ரூ.26,999-க்கு வாங்கலாம்,  இருப்பினும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் செல்வது பரிந்துரைக்கப்படுகிறது. இதன் விலை ரூ.2,000 மட்டுமே அதிகமாகும். 

ஆங்கிலத்தில் படிக்க:   Best tablets for studying and taking notes under Rs 50,000

 Apple iPad (10th generation)

50,000 ரூபாய்க்கும் குறைவான விலையுள்ள ஒரே நல்ல ஆப்பிள் டேப்லெட் iPad (10வது ஜென்) ஆகும், இது அக்டோபர் 2022-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. நீங்கள் iPad mini (6வது ஜென்) வாங்கலாம் இருந்தாலும், குறிப்பு எடுக்க சிறிய ஸ்கிரீன் சிறந்ததாக இருக்காது.

இந்த டேப் 10.9-இன்ச் எல்சிடி திரை கொண்டுள்ளது மற்றும் Apple A14 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது, இது iPhone 12-ல் அறிமுகமானது. 

iPad (10th gen) என்பது ஆப்பிள் பென்சில் அல்லது ஸ்டைலஸுடன் இணைந்து வருகிறது. இந்த விலையில்  சிறந்த ஆப்பிள் டேப்லெட்டாகும்.  64ஜிபி ஸ்டோரேஜ் வெர்ஷன் ரூ.32,900க்கு வாங்கலாம், 256ஜிபி பதிப்பு ரூ.49,900க்கு விற்கப்படுகிறது.

Samsung Galaxy Tab S8

2022-ல் அறிமுகப்படுத்தப்பட்ட Galaxy Tab S8 இன்னும் இந்தியாவில் ரூ.50,000க்கு கீழ் உள்ள வேகமான டேப்லெட்டுகளில் ஒன்றாக உள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, ஆண்ட்ராய்டில் இயங்கும் இந்த டேப்லெட் கொரில்லா கிளாஸ் 5 ஆல் பாதுகாக்கப்பட்ட 11 இன்ச் 120 ஹெர்ட்ஸ் டிஎஃப்டி எல்சிடி திரையைக் கொண்டுள்ளது.

பட்ஜெட் பிரச்சனை இல்லை என்றால் இந்த டேப் நிச்சயம் வாங்கலாம். 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி கொண்ட பேஸ் வெரியண்ட் தற்போது ரூ. 50,998-க்கு விற்கப்படுகிறது, ஆனால் இதை வங்கி சலுகைகளுடன் நீங்கள் குறைந்த விலையில் வாங்கலாம். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment