பிரபல சாட்டிங் செயலியான வாட்ஸ்அப், 2021 ஆரம்பத்தில் மேற்கொண்ட புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கை காரணமாக, பலர் அன்-இன்ஸ்டால் செய்து வேறு தளங்களுக்கு மாற்றிக்கொண்டனர். இதையடுத்து, பயனர்களை தக்கவைத்திட பாலிசியில் சில மாற்றங்களை வாட்ஸ்அப் கொண்டு வந்தது.
இருப்பினும், பாலிசியில் முழுமையாக உடன்படாதவர்களும், வாட்ஸ்அப் அம்சங்கள் போதுமானதாக இல்லை என கருதுபவர்களும், அன்றாடப் பணிக்காக மிகவும் தனிப்பட்ட, பாதுகாப்பான செயலியை பயன்படுத்த விரும்புவோர்களாகவும் நீங்கள் இருந்தால், வாட்ஸ்அப் செயலிக்கான ஆல்டர்நேட்டிவை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.
iMessage
நீங்களும், உங்கள் நண்பர்களும் ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்துவோர் என்றால், இச்செயலி தேவைப்படாது. இது ஆப்பிளின் இன்-பில்ட் செயலி ஆகும். புதிய அம்சங்கள், மேம்படுத்தப்பட்ட UI இடைமுகம், மற்ற ஆப்பிள் சாதங்களுடன் டேட்டாவை இணைத்தல் போன்ற வசதிகள் உள்ளன. பயனர்கள் சில உணர்ச்சிகளை வெளிப்படுத்த மெமோஜிகளை உருவாக்கி பயன்படுத்தலாம். குறிப்பிட்ட மெசேஜ்களுக்கு எஃபெக்ட், ரியாக்ஷன் சேர்ப்பது போன்றவை முயற்சிக்கலாம். வாட்ஸ்அப் போலவே, எல்லா உரையாடல்களும் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டவை, எந்த வெளி தரப்பினரும் உங்கள் உரையாடலை படிக்க முடியாது.
Discord
டிஸ்கார்ட் கேமர்ஸூக்காகவே வடிவமைக்கப்பட்ட ஒரு காலம் இருந்தது. தற்போது, அனைவரும் தினசரி பயன்பாட்டிற்கு உபயோகிக்கின்றனர். இதில், மெசேஜ் செய்வதை காட்டிலும் வாய்ல் கால் செய்யும் வசதி உள்ளது. ஒரு மெசேஜில் 8எம்.பி வரையிலான டேட்டாவை அனுமதிக்கும் என்பதால், நீங்கள் GIFகள், எமோஜிகள் மற்றும் பைல்களை அனுப்பலாம். சந்தா கட்டணம் செலுத்தக்கூடிய டிஸ்கார்ட் நைட்ரோ செயலி மூலம், 100 எம்.பி வரையிலான பைல்களை அனுப்பிட முடியும். இதுதவிர, இதிலிருந்து Steam, Twitch, Spotify அல்லது YouTube கணக்குகளுடன் தடையின்றி அணுகலாம்.
டெலிகிராம்
டெலிகிராம் செயலியை திருட்டு தனமாக பகிரப்படும் திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யவும், ஷேர் செய்யும் பயன்படுத்தகீறிர்கள் என்பதை நன்கு அறிவோம். ஆனால், சில அம்சங்களால் வாட்ஸ்அப்பை காட்டிலும் டெலிகிராம் முன்னிலையில் உள்ளது. டெலிகிராமில் ஒரே நேரத்தில் 1 லட்சம் பேர் வரை சேரக்கூடிய சூப்பர் குரூப் ஆரம்பிக்கலாம். அதே போல், நாம் அனுப்பும் மெசேஜ்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு தானாக டெலிட் செய்யும் வகையில் டைமர் செட் செய்ய முடியும். இதில் வீடியோ அழைப்பு அம்சம் இல்லை. ஆனால், டைம் பாஸூக்கு மினி கேம்ஸ்கள் உள்ளன. மூன்று அடுக்கு பாதுகாப்பு இருப்பதால், அதன் உரையாடல்கள் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்.
கூகுள் சாட்
முன்பு Hangouts என அறியப்பட்ட Google Chat, உங்கள் இன்பாக்ஸுக்கு அருகில் இருப்பதால், பணி வேலைகளுக்கு சிறந்தது ஆகும். உங்களில் பெரும்பாலானோர் வோர்க் மெயில் ஐடியை மொபைலில் லாகின் செய்யாமல் இருப்பீர்கள். அவர்களுக்கு, இச்செயலி உதவியாக இருக்கும். அர்ஜன்ட் மெசேஜ்கள், தனிப்பட்ட நபர்களிடமிருந்து வரும் மெயில் என பிரித்து உங்களுக்கு வழங்கும் தன்மை கொண்டது. இச்செயலி WhatsApp போலவே செயல்படுகிறது. கூடுதலாக ஒரே கிளிக்கில் மிட்டிங்கில் நுழையும் வசதி உள்ளது.
Bridgefy
காடு போன்ற இடங்களுக்கு டிரக்கிங் செல்கையில் இன்டர்நெட் கிடைக்காமல் சிக்கிக்கொள்ளும் சூழ்நிலை உண்டு. அப்போது, ஆப்லைனில் மெசேஜ் அனுப்பிட இச்செயலி உதவியாக இருக்கும். Bluetooth மூலம் வோர்க் செய்யும் இச்செயலி மூலம், 330 அடி தூரத்திற்குள் இருக்கும் நபருடன் உரையாடலாம். பிராட்காஸ்ட் முறை மூலம் பெரிய குழுக்களுக்கு ஒரு செய்தியை அனுப்ப உங்களை அனுமதிக்கிறது. தொடக்கப் பதிவிறக்கச் செயல்முறையைத் தாண்டி உங்களுக்கு இணைய இணைப்பு தேவையில்லை. இது மிகவும் சிறப்பானது, ஆனால் வரம்பிற்குள் வேறு Bridgefy பயனர்கள் இல்லை என்றால் உபயோகம் இல்லாமல் போய்விடும்.
Signal
சிக்னல் செய்யும் விளம்பரத்தில், எலாம் மஸ்க் பெரிய பங்கு வகித்துள்ளார். இச்செயலியின் பயன்பாடு முழுவதுமாக ஓப்பன் சோர்ஸ் ஆகும். மெசேஜ்களை தானாக டெலிட் செய்யும் வசதி, ஹை பாதுகாப்பு அம்சம், ஸ்கிரீன் ஷாட்கள் எடுக்கப்படுவதைத் தடுக்கும் திரைப் பாதுகாப்பு அம்சம் போன்ற வசதிகள் உள்ளன. எந்தவித விளம்பரங்களும் தோன்றாது. ஒரே நேரத்தில் 40 பேர் வரை, மிகவும் பாதுக்காப்பாக வீடியோ கால் செய்யலாம். ஆனால், மறுபுறம் WhatsApp, ஒரு நேரத்தில் 8 உறுப்பினர்களை மட்டுமே ஆதரிக்கிறது.
KIK
பழைய சாட்டிங் செயலியான கிக்கை உபயோகிக்க மொபைல் நம்பர் தேவையில்லை. மெயில் ஐடியை மட்டும் பதிவிட்டால் போதும். இச்செயலியில் வாட்ஸ்அப் போலவே, வாய்ஸ் கால், ஸ்டிக்கர்கள், மீடியா பகிர்வு, குரூப் சாட் போன்ற அம்சங்களை பெறுவீர்கள். நீங்கள் வினாடி வினாக்களில் பங்கேற்பது, செய்திகளை படிப்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடலாம். உங்கள் தனிப்பட்ட மொபைல் நம்பரை இன்டர்நெட்டில் பதிவிடுவதை விரும்பாதோர், இதனை முயற்சிக்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.