ரூ.1500க்கும் குறைவான விலையில் குட் சவுண்ட் குவாலிட்டி, பேட்டரி லைவ் உள்ளிட்ட அம்சங்கள் கொண்ட சிறந்த வயர்லெஸ் இயர்பட்ஸ் குறித்து பார்ப்போம்.
boAt Airdopes 141
boAt ஏர்டோப்ஸ் 141 ம் ஸ்டைலான வடிவமைப்பை கொண்டுள்ளது. 42 மணிநேரம் வரை ப்ளே டைம் மற்றும் IPX7 water resistance வழங்குகிறது. இது ஒரு நிலையான மற்றும் தடையற்ற இணைப்புக்கான புளூடூத் 5.0 ஐயும் கொண்டுள்ளது. டச் வசதி உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் நீண்ட நேரம் தாங்கக் கூடிய பேட்டரி உள்ளது. அமேசான் தளத்தில் ரூ.1099 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
realme TechLife Buds T100
Realme TechLife இயர்பட்ஸ் 25 மணிநேரம் ப்ளே டைம் கொண்டுள்ளது. bass-driven சவுண்ட் குவாலிட்டி உள்ளது. கச்சிதமான வடிவமைப்பை வழங்குகின்றன. இது தடையற்ற இணைப்புக்கான புளூடூத் 5.0 ஐயும் கொண்டுள்ளது. இருப்பினும் இது ஆவரேஜ் பேட்டரி லைவ் வழங்குகிறது. இது அமேசான் தளத்தில் ரூ.1499க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Boult Audio Z40
Boult Audio இயர்பட்ஸ் 28 ப்ளே டைம் வழங்குகிறது மற்றும் எளிதான செயல்பாட்டிற்கான டச் கன்ட்ரோல்களுடன் ஒரு ஸ்னக் ஃபிட் டிசைனை வழங்குகின்றன. அதோடு இந்த இயர்பட்ஸ் மியூசிக் என்ஜாய் செய்ய noise isolation வசதியை வழங்குகிறது. இந்த இந்த லிஸ்டில் உள்ள மிக குறைந்த விலை இயர்பட்ஸ் ஆகும். நீண்ட நேரம் பேட்டரி லைவ் வழங்குகிறது. ஆன்லைன் தளத்தில் ரூ.999 விலையில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
Noise Newly Launched Buds N1
Noise Launched earbuds ஆனது 20 மணிநேரம் ப்ளே டைம் மற்றும் உடனடி Instacharge அம்சத்துடன் ஸ்டைலான மற்றும் ட்ரெண்ட் வடிவமைப்பை வழங்குகிறது. Crystal clear calls வசதிக்காக இரட்டை மைக்கைக் கொண்டுள்ளது.இருப்பினும் இது ஆவரேஜ் பேட்டரி லைவ், சிலவற்றிக்கும் மட்டும் டச் கன்ட்ரோல் வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“