வாட்ஸ் அப்பில் சமீப நாட்களாக உலாவி வரும் ஃபார்வோர்ட் மெசேஜ் ஒன்று யூசர்களிடம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தொழில் நுட்ப உலகில், வைரஸ் என்ற சொல்லை கேட்டாலே பலரும் அஞ்சுவார்கள். காரணம், ஒருமுறை வைரஸ் நுழைந்து விட்டால் அதனால் ஏற்படும் இழப்புகள் ஏராளம். ஒரு சின்ன பென் ட்ரைவரில் வைரஸ் நுழைந்தால் எவ்வளவும் சிரமம் என்பதை நாம் அறிவோம். ஒரு பென் ட்ரைவரிலியே இப்படி என்றால் நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் செயலிகளில் வைரஸ் தாக்குதல் வந்தால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.
அப்படி தான், தற்போது வாட்ஸ் அப்பில் நமது நண்பர்களால் நமக்கு அனுப்பப்படும் கருப்பு புள்ளி ஃபார்வோர்ட் மெசேஜ். இந்த புள்ளீயை தொட்டால் வாட்ஸ் அப் ஆங் ஆகிவிடும். அது எப்படி ஆங் ஆகும்? இதெல்லாம் பொய் என்று தான் பலரும் அதை முயற்சி செய்கிறார்கள். ஆனால் உண்மையில் அந்த கருப்பு புள்ளி என்ன என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
எல்லா கருப்பு புள்ளி மெசேஜ்களும் வைரஸ் தாக்குதல் தான் என்று ஒட்டு மொத்தமாக சொல்லிவிட முடியாது. ஆனால். அதே சமயத்தில் நமக்கு வரும் கருப்பு புள்ளியையும் எளிதாக விட்டு விட முடியாது. இந்த கருப்பு புள்ளியின் மூலம் வைரஸ் தாக்குதல் நடத்த வாய்ப்புக்கள் அதிகம். அதே போல், இந்த மெசேஜ் வந்த உடன் அதை உடனடியாக டெலிட் செய்வது நல்லது. ஏனென்றால், அவை உங்கள் ஃபோனிலியே தங்கி மொபைலில் இருக்கும் உங்களின் தரவுகளை, (ஃபோட்டோ, வீடியோ, காண்டெக்ட்) போன்றவற்றை உங்களுக்கே தெரியாமல் எடுக்கவும் வாய்ப்புகள் அதிகம்.