ஏர்டெல் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாகும். பயனர்களின் வசதிக்கு ஏற்ப டேட்டா திட்டங்களை வழங்கி வருகிறது. அன்லிமிடெட் திட்டம், Add-on திட்டம் எனப் பலவற்றை வழங்குகிறது.
அந்த வகையில் ஏர்டெல் ரூ.49 விலையில் புதிய 4ஜி டேட்டா வவுச்சரை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இது பூஸ்டர் டேட்டா திட்டமாகும். உங்களுடைய அன்லிமிடெட் திட்டத்தில் அல்லது மாதாந்திர திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்துவிட்டால் இந்த பூஸ்டர் டேட்டா திட்டத்தை பயன்படுத்தலாம். ஒரு நாளை வேலிடிட்டி உடன் வரும் இந்த டேட்டா திட்டம் அதிகப்படியான டேட்டாவை வழங்குகிறது.
ரூ.49 திட்டம்
பார்தி ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்காக ரூ.49 ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தில் பயனர்கள் ஒரு நாள் பூஸ்டர் டேட்டா வேலிடிட்டியை பெறுவர். இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 6ஜிபி டேட்டாவை வழங்கப்படுகிறது. இது ஒரே நாள் பயன்பாட்டில் அதிகப்படியான டேட்டா பயன்பாடாகும். Wi-Fi நெட்வொர்க் இல்லாதவர்கள் இதை பயன்படுத்தலாம். அதோடு இது முழுக்க முழுக்க 4ஜி டேட்டாவை வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“