/indian-express-tamil/media/media_files/2025/10/28/chatgpt-go-2025-10-28-13-29-09.jpg)
இந்திய பயனர்களுக்கு ஜாக்பாட்: சாட்ஜிபிடி கோ சேவை ஓராண்டுக்கு முற்றிலும் இலவசம்!
அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) உலகில் கோலோச்சும் நிறுவனமான ஓபன் ஏ.ஐ, இந்தியப் பயனர்களுக்கு ஒரு ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன் (Sam Altman) தலைமையிலான இந்நிறுவனம், அதன் பிரீமியம் சேவைகளில் ஒன்றான 'சாட்ஜிபிடி கோ'-வை இந்தியாவில் 1 வருட காலத்திற்கு முற்றிலும் இலவசமாக வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. நவ.4 அன்று பெங்களூருவில் ஓபன் ஏ.ஐ நடத்தும் அதன் முதல் இந்திய நிகழ்வான DevDay Exchange மாநாட்டுக்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியாகி, டெக் உலகில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
சலுகை யாருக்கு? எப்படிப் பெறுவது?
புதிய பயனர்கள்: நவ.4 முதல் தொடங்கும் இந்தச் சலுகைக் காலத்தில் பதிவு செய்யும் அனைத்துப் புதிய பயனர்களுக்கும் சாட்ஜிபிடி கோ சேவை ஓராண்டுக்கு இலவசமாகக் கிடைக்கும். தற்போதைய சந்தாதாரர்கள் ஏற்கனவே பணம் செலுத்தி சாட்ஜிபிடி கோ சந்தா வைத்திருப்பவர்களுக்கு, கூடுதலாக 12 மாத இலவச அணுகல் தானாகவே வழங்கப்படும்.
சாட்ஜிபிடி கோ என்ன ஸ்பெஷல்?
குறைந்த விலையில் மேம்பட்ட ஏ.ஐ. வசதிகளை அனைவரும் பெற வேண்டும் என்ற பயனர்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் பிரத்யேகமாக சாட்ஜிபிடி கோ அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம், சாதாரண இலவசப் பதிப்பை விட பல மடங்கு சிறந்தது.
அதிக மெசேஜ் லிமிட் - நீங்க அதிக கேள்விகளைத் தொடர்ந்து கேட்க முடியும்.
பட உருவாக்கம் - உங்க கற்பனைக்கு ஏற்பப் படங்களை உருவாக்கலாம் (Image Generation).
பைல்ஸ் பதிவேற்றும் திறன் - பைல்ஸ் (Files) பதிவேற்றி, அதன் கண்டெண்ட் பகுப்பாய்வு செய்யலாம்.
நெகிழ்வுத் தன்மை - அன்றாடப் பயன்பாடு முதல், தொழில்முறை மற்றும் ஆய்வுப் பணிகள் வரை பயனுள்ளதாக இருக்கும்.
ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தைப் பொறுத்தவரை, இந்தியா உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் சந்தை ஆகும். இந்தியாவில் சாட்ஜிபிடி கோ அறிமுகமான முதல் ஒரு மாதத்திலேயே, பணம் செலுத்தும் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2 மடங்குக்கும் அதிகமாக உயர்ந்தது. இதன் மூலம் கிடைத்த உற்சாகமே இந்தத் திட்டத்தை உலகளவில் 90-க்கும் மேற்பட்ட சந்தைகளுக்கு விரிவுபடுத்தக் காரணம். ஓபன் ஏ.ஐ., தனது 'இந்தியா ஃபர்ஸ்ட்' உறுதிப்பாட்டின் தொடர்ச்சி என்றும், இந்தியாவின் IndiaAI திட்டத்திற்கு ஆதரவாகவும் குறிப்பிடுகிறது.
அடுத்த ஆண்டு இந்தியா ஏ.ஐ. தாக்க உச்சிமாநாட்டை நடத்தத் தயாராகி வரும் நிலையில், இந்த இலவச அணுகல், டெவலப்பர்கள், மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் என கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு மேம்பட்ட AI கருவிகளை எளிதில் கொண்டு சேர்க்கும் என நம்பப்படுகிறது. சாட்ஜிபிடி-யின் துணைத் தலைவர் நிக் டர்லி, "இந்தியப் பயனர்களின் ஈடுபாடும், அவர்கள் காட்டும் படைப்பாற்றலும் எங்களுக்கு உத்வேகம். இந்த ஓராண்டு இலவச சேவை, மேலும் பலருக்கு மேம்பட்ட AI-யை அனுபவிக்க உதவும்," என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us