மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், தான் உபேயாகிக்கும் போல்டு ஸ்மார்ட்போனை குறித்து தகவலை வெளியிட்டுள்ளார். பெரும்பாலோர் தங்களது நிறுவன ஸ்மார்ட்போன்களை உபயோகிப்பார்கள். ஆனால், பில் கேட்ஸ் வித்தியாசமாக சொந்த நிறுவன தயாரிப்பான சர்பேஸ் டுயோ ஸ்மார்ட்போனிற்கு பதிலாக சாம்சங் கேலக்ஸி Z போல்டு 3 ஸ்மார்ட்போனை உபயோகித்து வருவதாக தெரிவித்துள்ளது.
ரெடிட் தளத்தில் நடைபெற்ற உரையாடலின் போது, சாம்சங் கேலக்ஸி Z போல்டு 3 உபயோகிப்பதாக பில் கேட்ஸ் தெரிவித்து இருக்கிறார்.
அவர் கூறியதாவது, நான் ஆண்ட்ராய்டு சாம்சங் கேலக்ஸி Z போல்டு 3 பயன்படுத்திகிறேன். வித்தியாசமானவற்றை முயற்சிப்பேன். இந்த திரை மூலம் சிறந்த போர்ட்டபிள் கணினி மற்றும் போனை என்னால் பெற முடிகிறது. வேறு எதுவும் இல்லை என தெரிவித்தார்.
ஏற்கனவே பல சமயங்களில் பில் கேட்ஸ் ஐபோனுக்கு பதிலாக தான் ஆண்ட்ராய்டு சாதனத்தை பயன்படுத்தி வருவதாக அறிவித்து இருக்கிறார். ஆனால், இம்முறை தான், எந்த ஸ்மார்ட்போனினை பயன்படுத்துகிறேன் என்பதை வெளிப்படையாக கூறியுள்ளார்.
Microsoft Surface Duo ஸ்மார்ட்போனில் ஏறக்குறைய Samsung Galaxy Z Fold 3இல் அம்சங்களே இடம்பெற்றுள்ளன.
Samsung Galaxy Z Fold 3 சிறப்பு அம்சங்கள்
- 6.2 இன்ச் HD+ AMOLED 2X டிஸ்பிளே.(மொபைலின் போல்டு திறந்தால், மொத்த டிஸ்பிளே சைஸ் 7.6 இன்ச் ஆகும்)
- 5nm 64-bit ஆக்டா கோர் பிராசஸர்
- 12ஜிபி ரேம்
- 256ஜிபி, 512 ஜிபி ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 11
- 12 எம்.பி அல்ட்ரா வைடு, வைடு ஆங்கிள் மற்றும் டெலிபோட்டோ லேன்ஸ் கொண்ட மூன்று பின்புற கேமராக்கள்
- முன்புறத்தில் கவர் டிஸ்பிளேவில் 10 எம்.பி கேமராவும், டிஸ்பிளேவில் 4 எம்.பி கேமராவும் கொண்டது.
- 4400mah பேட்டரி
விலை
- 12ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ் - ரூ1,49,999
- 12 ஜிபி ரேம், 512 ஜிபி ஸ்டோரேஜ் - ரூ1,57,999
இதற்கிடையில், சாம்சங் நிறுவனம் கேலக்ஸி Z போல்டு 4 ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாகவும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil