ப்ளாக் ஷார்க் 2 ஏற்கனவே சீனாவில் மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு இந்நிறுவனம் ப்ளாக் ஷார்க் ஹோல் என்ற போன் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. சியோமியின் சப் ப்ராண்டான ப்ளாக் ஷார்க் நேரடியாக இந்தியாவில் விற்பனை செய்யும் முதல் போன் இதுவாகும்.
Black Shark 2 Gaming Phone Specifications
6.39 inch AMOLED திரை கொண்ட ஸ்மார்ட்போன் இது
19.5:9 அஸ்பெக்ட் ரேசியோ கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்
ப்ரோசசர் : குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 855
ஸ்டோரேஜ் : 6GB RAM / 128GB அல்லது 12GB RAM/256GB
பேட்டரி : 27W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் கூடிய 4000mAh பேட்டரி
கேமரா : 48 எம்பி மற்றும் 12 எம்பி செயல்திறன் கொண்ட பின்பக்க கேமராக்கள் மற்றும் 20 எம்.பி. செல்ஃபி கேமரா
ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் : இன் - டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது
நுபியா ரெட் மேஜிக் மற்றும் அசூஸ் ஆர்.ஓ.ஜி. கேமிங் ஸ்மார்ட்போன்களுக்கு சவாலாக களம் காண்கின்றது இந்த ஸ்மார்ட்போன். நுபியாவின் ரெட் மேஜிக் 3 விரைவில் இந்தியாவில் வெளியாக உள்ளது.
மேலும் படிக்க : ஒன்ப்ளஸ் 7 ப்ரோவுக்கு போட்டியாளர் ரெடி… களம் இறங்கியது அசூஸ் ஜென்ஃபோன் 6 !