வெகுநாள் காத்திருப்பை இன்று பூர்த்தி செய்கிறது ப்ளாக்பெர்ரி நிறுவனம்

எவால்வ் மற்றும் எவால்வ் எக்ஸ் போன்கள் இந்தியாவில் இன்று அறிமுகம்!

ப்ளாக்பெர்ரி எவால்வ் மற்றும் எவால்வ் எக்ஸ் ( BlackBerry Evolve and Evolve X )

ப்ளாக்பெர்ரி தன்னுடைய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விற்பதில் மிகவும் தீவிரம் காட்டி வருகிறது. மிக சமீபத்தில் ப்ளாக்பெர்ரி தன்னுடைய கீ2 (BlackBerry KEY 2) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது. அதன் விலை சுமார்  ரூபாய் 42,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன்  வரிசையில் ப்ளாக்பெர்ரி எவால்வ் (BlackBerry Evolve) மற்றும் ப்ளாக்பெர்ரி எவால்வ் எக்ஸ் ( BlackBerry Evolve  X) என இரண்டு ஸ்மார்ட்போன்களையும் இன்று வெளியிட திட்டமிட்டிருக்கிறது ப்ளாக்பெர்ரி நிறுவனம்.

இந்த அறிமுக நிகழ்வானது இன்று காலை 11 மணி அளவில் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வில் கலந்து கொள்ள ஊடகத்துறையினரை அழைத்திருந்தது ப்ளாக்பெர்ரி நிறுவனம். அந்த அழைப்பிதழில் ” Secure Your Date ” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ப்ளாக்பெர்ரி எவால்வ் மற்றும் எவால்வ் எக்ஸ் ( BlackBerry Evolve and Evolve X ) சிறப்பம்சங்கள்

இந்த எவால்வ் மற்றும் எவால்வ் எக்ஸ்  சிறப்பம்சங்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிற நிலையில் கோஸ்ட் பதிவில் இவ்விரண்டு போன்களின் சிறம்சங்கள் பற்றி சிறிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கீ2 ஸ்மார்ட்போன்களைப் போல் கீபோர்ட்கள் இல்லாமல் தான் இந்த இரண்டு போன்களும் வரும். மேலும் அதனுடைய திரை குறைந்தளவு பெசில் விட்த்துடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு போன்களின் பேட்டரி திறன் 4000mAh ஆகும். ஆனால் பேட்டரிகளை போனில் இருந்து வெளியில் எடுக்க இயலாது.

இந்த போன்கள் இரட்டை பின்பக்க கேமராக்களை கொண்டிருக்கும் என்றும் எடைக்குறைவான போன்களாகவும் இது இருக்கும் என்று கோஸ்ட் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

To read this article in English 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close