ப்ளாக்பெர்ரி எவால்வ் எக்ஸ் ( BlackBerry Evolve X ) ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்

விலை, சிறப்பம்சங்கள், விற்பனைக்கு வரும் தேதி பற்றி ஒரு பார்வை !

ஸ்மார்ட்போன் வரிசையில் ப்ளாக்பெர்ரி எவால்வ் (BlackBerry Evolve) மற்றும் ப்ளாக்பெர்ரி எவால்வ் எக்ஸ் ( BlackBerry Evolve X) என இரண்டு ஸ்மார்ட்போன்களையும் நேற்று வெளியிட்டது ப்ளாக்பெர்ரி நிறுவனம்.

ப்ளாக்பெர்ரி எவால்வ் எக்ஸ் ( BlackBerry Evolve X ) சிறப்பம்சங்கள்

எவால்வ் எக்ஸ் மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன் ஆகும். 5.99 ஃபுல் எச். டி திரையுடன் கூடிய 18:9 ஃபார்மெட்டுடன் வருகிறது. ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேன்னருடன் வரும் இந்த போன் ஸ்னாப்ட்ராகன் 660 ப்ரோசஸ்ஸருடன் வருகிறது.

6GB RAM / 64GB இண்டெர்நெல் ஸ்டோரேஜ்ஜுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மைக்ரோ எஸ்.டி கார்ட் மூலம் 2TB வரையில் ஸ்டோரேஜ்ஜினை வைத்துக் கொள்ளலாம்.

BlackBerry Evlove X Features

எவால்வ் எக்ஸ் போனின் பின்பக்க அமைப்பு

ஆண்ட்ராய்ட் ஓரியோ இயங்குதளத்தில் இயங்குகிறது. பேட்டரி திறன் 4000mAh ஆகும்.

ப்ளாக்பெர்ரி எவால்வ் போனின் விலை ரூ. 24,990 மற்றும் ப்ளாக்பெர்ரி எவால்வ் எக்ஸ் போனின் விலை ரூ. 34,990 ஆகும். இந்த இரண்டு போன்களும் வருகின்ற செப்டம்பர் மாதத்தில் அமேசானில் விற்பனைக்கு வருகிறது.

ப்ளாக்பெர்ரி எவால்வ் எக்ஸ் கேமராக்கள்

13MP இரட்டை கேமராக்களுடன் வருகிறது இந்த போன். அதில் ஒரு கேமரா டெலிபோட்டோ லென்ஸுடன் வருகிறது. அதனுடன் டூயல் டோன் எல்.ஏ.டி ஃபிளாஷ் அமைக்கப்பட்டிருக்கிறது.

செல்பி கேமரா 16MP திறன் கொண்டதாகும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close