Advertisment

அபூர்வ சந்திர கிரகணம்: அழியா ஆவணமாக ஸ்மார்ட் போனில் படம் பிடித்து வைப்பது எப்படி?

உங்கள் போட்டோகிராபி ஸ்கில்லிற்கு சவாலாக இருக்குமா இந்த சந்திர கிரகணம்?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Lunar eclipse 2019, சந்திர கிரகணம் இன்று இரவு

Lunar eclipse 2019- சந்திர கிரகணம் இன்று இரவு

Blood moon lunar eclipse : இந்த நூற்றாண்டின் மிக நீளமான சந்திர கிரகணம் இன்று தோன்ற உள்ளது. இதனை இந்தியாவில் இருக்கும் அனைத்து நகரங்களில் இருந்தும் பார்க்க முடியும். இந்த சந்திர கிரகணத்தின் நடுவே பிளட் மூன் எனப்படும் செந்நிற நிலவு நிகழ்வும் நடைபெற இருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கும் இந்த கிரகணத்தை காண உலகம் முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஏனெனில் இந்த நூற்றாண்டின் முதல் நீண்ட சந்திர கிரகணம் இது.

Advertisment

சந்திர கிரகணம் 2018: அரிய நிகழ்வை உங்களின் அடுத்த தலைமுறைகளுக்கு நினைவு பரிசாக எப்படி கொடுப்பது?

இந்த அரிய வகை நிகழ்வினை படம் பிடித்து பத்திரமாக வைத்துக் கொள்ள அனைவருக்கும் விருப்பம் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. இச்சமயத்தில் உங்களிடம் விலையுயர்ந்த கேமராக்கள் மற்றும் திறன்பேசிகள் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நீங்கள் யோசிப்பது சரிதான். ஆனால் இருக்கின்றன ஸ்மார்ட் போனினை வைத்து இந்த அறிய நிகழ்வினை எப்படி படம் பிடிப்பது என்ற கேள்விக்கான பதில் இங்கு உள்ளது.

Blood moon, Lunar Eclipse Today Time Blood moon, Lunar Eclipse Today

டிஎஸ்எல்ஆர் கேமராவும் டெலிபோட்டோ லென்ஸும் வைத்திருப்பவர்களுக்கு இந்நிகழ்வு வரப்பிரசாதமாக இருக்கும்.

Blood moon lunar eclipse நிகழ்வினை திறன்பேசி கொண்டு எப்படி புகைப்படம் எடுப்பது?

தற்போது வரும் திறன்பேசிகளிலேயே வைட் ஆங்கிள் அல்லது டெலிபோட்டோ லென்ஸ்கள் இருக்கிறது. மிகக் குறைவான ஒளியில் நீங்கள் புகைப்படம் எடுக்க வேண்டிய நிலை இருப்பதால் நீங்கள் ஐஓஎஸ்ஸினை அதிகரித்து வைக்க வேண்டும்.

அப்படி ஐஓஎஸ் அதிகமானால் புகைப்படத்தின் துல்லியத்தன்மையில் பிரச்சனைகள் உருவாவதிற்கு வாய்ப்புகள் அதிகம்.

இப்படியான சூழலில் நீங்கள் தனியாக ஒரு டெலிபோட்டோ லென்சினை உங்களின் திறன்பேசிக்காக வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

அதிக ஃபோக்கல் நீளம் கொண்டிருக்கும் இந்த லென்ஸ்களுக்கு உதாரணம் ஓல்லோக்ளிப் ஆகேய் போட்டோ லென்ஸ், டிஎம்ஜி 82X ஜூம் மக்னிஃபியர் ஆப்டிக்கல் டெலிஸ்கோப் லென்ஸ்கள் தான். ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களில் இதை பயன்படுத்தலாம்.

Blood moon lunar eclipse

ட்ரைப்பாட் பயன்படுத்துங்கள்: 

இந்த நிகழ்வில் வானிலை ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒரு முறை மாறும். கையில் வைத்துக் கொண்டு எடுக்கும் போது துல்லியமான புகைப்படங்கள் கிடைக்காமல் போவதிற்கான வாய்ப்புகள் அதிகம். ஆகவே ட்ரைப்பாடினை பயன்படுத்துங்கள்.

ப்ரோ மோட் மற்றும் எச்.டி.ஆர் மோட்:

தற்போது வரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, உங்கள் போன்களில் ஃபோக்கஸ், ஸ்பீட், அபெர்ச்சர், எக்ஸ்போசர் லெவல் ஆகியவற்றை மாற்றிக் கொள்ளலாம். ஆகவே இந்த நிகழ்வினை புகைப்படம் எடுக்க ப்ரோ அல்லது எச்.டி. ஆர் மோடினை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.

நீங்கள் ரிமோட் ஷட்டரினை பயன்படுத்தி தொடர்ந்து புகைப்படங்களை எடுக்கவும் முடியும். இதனால் போட்டோக்கள் ஷேக் ஆவது தடுக்கப்படும்.

இதற்கெல்லாம் அதிக நேரம் ஒதுக்க விருப்பம் இல்லை என்றால் யோசிக்காமல் டைம் - லேப்ஸை பயன்படுத்தி போட்டோக்களை உங்கள் விருப்பம் போல் எடுத்துக் கொள்ளலாம்.

எடுக்கப்படும் போட்டோக்களை RAW ஃபார்மட்டில் வைத்துக் கொண்டால் எடிட் செய்வதற்கு எளிதாக இருக்கும். ப்ரோ கேம் அல்லது கேமரா FV - 5 போன்ற செயலிகளை பயன்படுத்தி எடிட் செய்து கொள்ளலாம்.

எப்போது இந்த சந்திர கிரகணம் நிகழும் என்பதைப் பற்றி அறிந்து கொள்ள

Lunar Eclipse Lunar Eclipse 2018
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment