/tamil-ie/media/media_files/uploads/2020/11/moon-1200.jpg)
Bluemoon 2020 october 31
Bluemoon 2020 Tamil News: அக்டோபர் 31-ம் நாளன்று, அதன் தெளிவான தோற்றத்தால் உற்சாகமான வான வேடிக்கையை நிகழ்த்துவதற்குத் தயாராக இருந்தது 'ப்ளூ மூன்'. அதிலும், இந்த முறை, ஹாலோவீன் நிகழ்வின்போது தோன்றியிருப்பது இரட்டிப்பு சிறப்பு. உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு இணைந்து அடர்ந்த வானத்தில் ஒளிவீசும் நிலவைப் பார்த்து ரசிக்க இதைவிடச் சிறந்த நாள் இருக்குமா என்ன?
அக்டோபர் 31-ம் தேதி இரவு 8.19 மணி முதல் 'புளூ மூன்' எளிதாகத் தெரியும் எனக் கூறப்பட்டது. வானம் மங்கலான மாசுபாட்டிலிருந்து விடுபட்டுத் தெளிவாகவும் அழகாகவும் இருந்தால், எந்தவொரு சிறப்பு வானியல் கருவிகளும் இல்லாமல் நீங்கள் ப்ளூ மூனை பார்க்கமுடியும். அக்டோபர் மாதத்தின் இரண்டாவது முழு நிலவு என்று கூறப்படும் ஹாலோவீன் நிலவைக் கண்டறிவதற்கும் இது எளிதாக்குகிறது. 'அறுவடை நிலவு' என்று அழைக்கப்படும் முதல் பௌர்ணமி, அக்டோபர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் நிகழ்ந்தது. நள்ளிரவு வரை பிரகாசிக்கும் இந்த முழு நிலவு, முந்தைய காலங்களில் நள்ளிரவுக்கு மேல், விவசாயிகள் தங்கள் கோடைக்கால விவசாய விளைபொருட்களை அறுவடை செய்ய உதவியது.
இது தவிர, ஹாலோவீன் நாளில் ப்ளூ மூன் தோன்றுவதைப் பார்ப்பது மேலும் பலரை உற்சாகப்படுத்தியது. ஏனென்றால், இதற்கு முன் 1944-ம் ஆண்டில்தான் ஹாலோவீன் ப்ளூ மூன் இறுதியாகத் தோன்றியது. மேலும், அடுத்த ஹாலோவீன் ப்ளூ மூன் 2039-ம் ஆண்டு காணப்படும் என்று கூறப்பட்டது. மறுபுறம், நீல நிற நிலவு கடைசியாக 2018 ஜனவரி 31 மற்றும் மார்ச் 31 அன்று காணப்பட்டது என்றும் 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி உடனடி எதிர்காலத்தில் காணப்படும் என்றும் கூறப்பட்டது.
இந்த ஆண்டு, 12 முழு நிலவுகளுக்குப் பதிலாக 13 முழு நிலவுகள் இருக்கும். மேலும், முழு நீள நீல நிற நிலவு நம் பார்வையில் தென்படுவது சாத்தியமில்லை என்பதால், ப்ளூ மூன் அதன் நிறத்துடன் தொடர்புடையதாக இல்லை. அப்படி ஏதேனும் நடந்தால் அது வளிமண்டலத்தில் சிதறடிக்கப்பட்ட தூசி மற்றும் புகை துகள்கள் காரணமாக இருக்கலாம் என்றும் மேலும், சிவப்பு ஒளியின் சிதறலைப் பாதிக்கும் 900 நானோமீட்டர்களை விட அகலமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.