இந்திய நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான போட், பிரீமியம் செராமிக் மற்றும் மெட்டல் கட்டமைப்பைக் கொண்ட தனது முதல் ஸ்மார்ட் ரிங்-ஐ அறிமுகம் செய்துள்ளது. ஆக்டிவிட்டி டிராக்கர் செய்வதோடு இதயத் துடிப்பு, தூக்கம், உடல் வெப்பநிலை மற்றும் SpO2 போன்ற பல்வேறு சுகாதார அளவுருக்களையும் கண்காணிக்க உதவுகிறது.
ஸ்மார்ட் ரிங் 5 ஏ.டி.எம் வாட்டர் மற்றும் தூசி-எதிர்ப்பு கொண்டது. நீச்சல் செய்யும் போதும் குளிக்கும் போது பயன்படுத்தலாம். இது 3 அளவுகளில் வருகிறது மற்றும் ஒரு முறை சார்ஜ் செய்தால், ஸ்மார்ட் ரிங் 7 நாட்கள் வரை நீடிக்கும்.
போட் ஸ்மார்ட் ரிங்-யின் தனித்துவம் அதன் ஸ்மார்ட் டச் கண்ட்ரோல் சிஸ்டம் ஆகும். இந்த ரிங் பயன்படுத்தி மியூசிக் கண்ட்ரோல் செய்யலாம். போட்டோ எடுக்கலாம். இன்ஸ்டாகிராம் ரீல்களை பயன்படுத்தலாம் என கூறியுள்ளது. மேலும்
ஃபிட்னஸ் மேனேஜ்மெண்ட், ரெக்கவரி ஸ்டேட்டஸ், தூக்க கண்காணிப்பு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய அனைத்து வகையான சுகாதாரத் தரவையும் வழங்குவதாக போட் ரிங் உள்ளது. இந்த போட் ரிங்-ஐ ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்களில் பயன்படுத்தலாம்.
இது தவிர அவசர அழைப்புகளை மேற்கொள்ளவும் ஸ்மார்ட் ரிங் பயன்படுத்தலாம். போட் ஸ்மார்ட் ரிங் ஆகஸ்ட் 28 முதல் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் விற்பனைக்கு வருகிறது. ரூ. 8,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
BoAt மட்டுமின்றி Noise நிறுவனமும் சமீபத்தில் ஸ்மார்ட் ரிங்-ஐ அறிமுகம் செய்தது. ஃபிட்னஸ் பேண்ட்/ஸ்மார்ட் வாட்ச் போன்ற அம்சங்களை இந்த ஸ்மார்ட் ரிங்-ம் வழங்குகிறது.