மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போயிங் ஸ்டார்லைனரின் முதல் க்ரூ டெஸ்ட் சோதனை பயணம் தொழில்நுட்பக் கோளாறால் கடைசி நிமிடத்தில் நிறுத்தப்பட்டது. விண்கலத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால் விண்வெளி பயணம் அடுத்த 24 மணி நேரத்திற்கு நிறுத்தி வைக்கப்படுவதாக நாசா அறிவித்தது.
சர்வதேச விண்வெளி மையத்துக்கு இந்திய வம்சாவளி விண்வெளி வீரரான சுனிதா வில்லியம்ஸ் மேற்கொள்ள இருந்த 3-வது பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போயிங் ஸ்டார்லைனரின் முதல் க்ரூ ஃப்ளைட் டெஸ்ட் பணியில் 58 வயதான வில்லியம்ஸ் மற்றும் நாசா விண்வெளி வீரர் பாரி "புட்ச்" வில்மோர் ( 61) ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மனிதர்களை ஏற்றிச் செல்ல தகுதியானதா என்பதை சோதனை செய்து ஆய்வு செய்ய இருந்தனர்.
இந்திய நேரப்படி இன்று காலை 8:04 மணிக்கு விண்கலம் ஏவப்பட இருந்தது. இந்நிலையில் அட்லஸ் V ராக்கெட்டில் 2-வது கட்டத்தில் உள்ள வால்வில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏவுதலுக்கு இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான நேரம் இருந்த நிலையில் ஏவுதல் நிறுத்தப்பட்டது.
அடுத்த ஏவுதல் நாளை இருக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் நாசாவிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“