சாட்ஜிபிடி-யின் உதவியுடன் ஹோம்வர்க் எழுதிய மாணவர், ஒரு வரியால் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
சாட்ஜிபிடி-யின் உதவியால் பல்வேறு விஷயங்களை செய்ய முடியும் என்று கூறப்பட்டது. குறிப்பாக இந்த ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியானது. ஓவியம் வரைவது முதல் மொழிபெயர்த்தல், செய்தி வாசித்தல் என்று எல்லாவற்றையும் இந்த தொழில்நுட்பம் செய்யும் வல்லமை இருப்பதால், பணியாளர்களுக்கு வேலையே இல்லாமல் போகும் சூழல் ஏற்படும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், தனது ஹோம்வர்க்கை சாட்ஜிபிடியின் உதவுயுடன் எழுதி உள்ளார். “ இது தொடர்பாக ட்விட்டரில் ரோகன் பட்டேல் என்பவர் கணக்கில் பதிவு ஒன்று பகிரப்பட்டது. “ எனது உறவினரின் பையன் 7வது வகுப்பு ஆங்கில பாடத்திற்கு வழங்கப்பட்ட வீட்டு பாடத்தை, சாட்ஜிபிடி உதவியுடன் எழுதி உள்ளன். ஆனால் அவன் எழுதி ஒரு வரியிலிருந்து இதை ஆசியர்கள் கண்டுபிடித்துள்ளனர்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
” ஏ.ஐ மொழி மாடலை பொருத்தவரையில், தனிப்பட்ட கருத்து எனக்கு கிடையாது” என்ற வரியை அவன் சேர்த்து எழுதியுள்ளான். இந்நிலையில் இதற்கு பல்வேறு கமெண்டுகள் வந்துள்ளது. ’இதைகூட யோசித்து பார்க்காமல் எப்படி அந்த சிறுவன் இப்படி எழுதினார் என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். “ 7ம், வகுப்பு படிக்கும் மாணவனால் இதை தவிர்த்துவிட்டு எழுதத் தெரியவில்லை என்றால் நமது கல்வியமைப்பில் சிக்கல் உள்ளது” என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.
பிப்ரவாரி மாதத்தில், இங்கிலாந்தில் ஒரு மாணவர் சாட்ஜிபிடியின் உதவியுடன் தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளார். ரசல் குரூப் பல்கலைகழத்தை சேர்ந்த பீட்டர் ஸ்னெப்வாங்கர்ஸ் என்ற மாணவர், ஆசிரியரின் அனுமதியுடன், சாட்பெட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 2000 வார்த்தைகள் கொண்ட கட்டுரையை எழுதி உள்ளார். வெறும் 20 நிமிடத்தில் ஏ.ஐ டூல் இந்த கட்டுரையை எழுதி முடித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“