உச்ச நீதிமன்ற நீதிபதி உத்தரவுபடி பிரேசில் நாட்டில் எலான் மஸ்க்கின் X சமூக வலைதள தடை உத்தரவு இன்று (சனிக்கிழமை) காலை முதல் அமலுக்கு வந்தது.
X தளத்தில் தவறான தகவல் பரப்புவதாக தொடர்ந்த வழக்கில் பிரேசில் உச்ச நீதிமன்ற நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டார். கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக நடந்து வரும் இந்த வழக்கில் எலான் மஸ்க் மற்றும் பிரேசிலிய உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
இதன் பின்னணியில் கடந்த வெள்ளிக்கிழமை ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் X தளத்தை தற்காலிக தடை செய்ய உத்தரவிட்டார்.
X தளத்திற்குப் ஒரு புதிய சட்டப் பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை மேற்கொள்ள மறுத்ததை அடுத்து, மொரேஸ் இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களுக்குச் சொந்தகாரரான மஸ்க், நீதிபதியின் உத்தரவுக்கு ஆவேசத்துடன் பதிலளித்தார், மொரேஸ் சர்வாதிகாரி, பிரேசிலில் ஜனநாயகத்தை அழிக்க முயற்சிக்கிறார் என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்நிலையில், பிரேசிலில் X சமூக வலைதளம் இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்கி நிலுவையில் உள்ள அபராத தொகையையும் செலுத்தும் வரை இந்த தடை உத்தரவு தொடரும் என நீதிபதி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“