நார்த்வெஸ்டர்ன் பல்கலைக் கழகம் வெள்ளியன்று, இதுவரை பதிவு செய்யப்படாத பிரகாசமான காமா-கதிர் வெடிப்பு, GRB 221009A, ஒரு பெரிய நட்சத்திரத்தின் சரிவு மற்றும் வெடிப்பினால் ஏற்பட்டது என்பதை உறுதிப்படுத்தியது. ஆனால் ஆய்வில் தங்கம் மற்றும் பிளாட்டினம் போன்ற கனமான தனிமங்கள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அதாவது அவை எங்கு, எப்படி உருவாகினது என்பது பற்றி நமக்கு இன்னும் தெரியவில்லை.
காமா-கதிர் வெடிப்புகள் தான் பிரபஞ்சத்தில் நாம் அறிந்த மிகவும் சக்திவாய்ந்த வெடிப்பு ஆகும். இந்த வெடிப்புகள் சூரியனின் பிரகாசத்தை விட ஒரு குவிண்டில்லியன் மடங்குகள் (அதாவது 10 மற்றும் 18 பூஜ்ஜியங்கள்) ஒளியை அனுப்பும். ஜி.ஆர்.பி-கள் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டன, ஆனால் தற்போதைய அறிவியல் ஒருமித்த கருத்து அவை கருந்துளைகளின் பிறப்பைக் குறிக்கின்றன.
GRB 221009A அக்டோபர் 2022-ல் பதிவு செய்யப்பட்டது, மேலும் இது B.O.A.T (brightest of all time) "எல்லா காலத்திலும் மிகவும் பிரகாசமானது" என்றும் அழைக்கப்படுகிறது. நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் மற்றும் பிற நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தி, இது ஒரு பெரிய நட்சத்திரத்தின் சரிவு மற்றும் வெடிப்பினால் ஏற்பட்டது என்பதை உறுதிப்படுத்தினர். ஆனால் இது ஒரு மர்மத்தைத் தீர்த்துவிட்ட நிலையில், இன்னொன்றைத் திறந்து விட்டது போலிருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சூப்பர்நோவாவில் பிளாட்டினம் மற்றும் தங்கம் போன்ற கன உலோகங்களின் சான்றுகள் காணப்படலாம் என்று விஞ்ஞானிகள் ஊகித்தனர். ஆனால் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கியைப் பயன்படுத்தி மேற்கொண்ட விரிவான புதிய ஆய்வில் அத்தகைய தகவல்கள் எதுவும் இல்லை. பிரபஞ்சத்தில் கனமான தனிமங்களின் தோற்றம் மற்றும் உருவாக்கம் வானியலில் மிகப்பெரிய திறந்த மர்மங்களில் ஒன்றாகும்.
ஆய்வுக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் பீட்டர் பிளான்சார்ட் கூறுகையில், GRB ஒரு பாரிய நட்சத்திரத்தின் வீழ்ச்சியால் உருவாக்கப்பட்டது என்பதை நாங்கள் உறுதிப்படுத்தியபோது, பிரபஞ்சத்தில் உள்ள சில கனமான தனிமங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதற்கான ஒரு கருதுகோளை சோதிக்க எங்களுக்கு வாய்ப்பளித்தது. ஆனால் இதில் கனமான உலலோகங்கள் பற்றிய தகவல்களை நாங்கள் காணவில்லை என்றார்.
B.O.A.T அக்டோபர் 9, 2022 அன்று பூமி வழியாக கடந்து சென்றது. அது மிகவும் பிரகாசமாக இருந்தது என்றும் பூமியை கடந்து சென்ற போது கிரகத்தில் உள்ள பெரும்பாலான காமா-கதிர் கண்டுபிடிப்பாளர்களை நிறைவு செய்யும் அளவுக்கு பிரகாசமாக இருந்தது. உண்மையான வெடிப்பு நமது கிரகத்திலிருந்து சுமார் 2 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் சாகிட்டா விண்மீன் திசையில் நடந்தது, அது சில நூறு வினாடிகள் நீடித்தது என்றும் விஞ்ஞானிகள் கூறினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“