உலகில் பிரகாசமான பொருள் என்னவெற்றால் பொதுவாக சூரியன் என்று தான் அனைவரும் கூறுவோம். ஏன் என்றால் அது உலகிற்கு வெளிச்சத்தை வழங்குகிறது. ஆனால் ஐரோப்பிய ஆய்வு பிரபஞ்சத்தில் மிகவும் பிரகாசமான பொருள் குவாசர் (Quasar) என்று கூறியுள்ளது. இது சூரியனை விட 500 டிரில்லியன் மடங்கு பிரகாசமாக உள்ளது என்றும் அது தினமும் சூரியனின் எடைக்கு நிகரான உணவை உண்ணுகிறது என்றும் கூறியுள்ளது.
ஐரோப்பிய தெற்கு கண்காணிப்பகம் பிரபஞ்சத்தில் மிகவும் பிரகாசமான பொருள் குவாசரின் குணாதிசயத்தை நேற்று (திங்களன்று) அறிவித்தது. இது பிரகாசம் மட்டுமல்ல, விண்வெளியில் இதுவரை காணப்பட்ட மிகவும் ஒளிரும் பொருள் என்றும் கூறியுள்ளது. குவாசரின் மையத்தில் இருக்கும் கருந்துளை ஒவ்வொரு நாளும் நமது சூரியனின் சூரியனின் எடைக்கு நிகரான உணவை உண்ணுகிறது.
குவாசர்கள் சில தொலைதூர விண்மீன் திரள்களின் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் பிரகாசமான மையங்களாகும். மேலும் அவை மிகப்பெரிய கருந்துளைகளால் இயக்கப்படுகின்றன. மிகப்பெரிய கருந்துளைகள் அவற்றின் அபரிமிதமான வலுவான ஈர்ப்பு விசையால் உறிஞ்சப்படும் பொருளை உட்கொள்வதன் மூலம் வளர்கின்றன.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட குவாசரின் மையத்தில் உள்ள கருந்துளை இன்றுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிக வேகமாக வளர்ந்து வரும் கருந்துளை ஆகும். குவாசரின் அதிகாரப்பூர்வ பெயர் J0529-4351 மற்றும் இது நமது கிரகத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது, அதன் ஒளி நம்மை அடைய 12 பில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாகும் என்று கூறியுள்ளது. அது எவ்வளவு தூரம் என்பதை அறிய, இந்த வீடியோவைப் பாருங்கள்.
ஆய்வின் முதன்மை ஆசிரியர் கிறிஸ்டியன் வுல்ஃப் கூறுகையில், நாங்கள் வேகமாக வளர்ந்து வரும் கருந்துளையை கண்டுபிடித்துள்ளோம். இது 17 பில்லியன் சூரியன்களைக் கொண்டுள்ளது. மேலும் இது ஒரு நாளைக்கு ஒரு சூரியனுக்கு மேல் சாப்பிடுகிறது. இது பிரபஞ்சத்தில் மிகவும் ஒளிரும் பொருளாகும் என்றார்.
மிகவும் பிரகாசமான குவாசருக்குள் இழுக்கப்படும் பொருள் அதிக ஆற்றலை வெளியிடுகிறது, அது சூரியனை விட 500 டிரில்லியன் மடங்கு அதிகமாக ஒளிரும். மிகவும் பிரகாசமாகவும், ஆற்றல் மிக்கதாகவும், பிரமாண்டமாகவும் இருந்தபோதிலும், இந்த குவாசர் "வெற்றுப் பார்வையில் மறைந்திருந்தது" என்று ஆராய்ச்சியாளர்களின் கூறினர்.
"ஒரு மில்லியன் குறைவான ஈர்க்கக்கூடிய குவாசர்களைப் பற்றி நாங்கள் ஏற்கனவே அறிந்திருந்தும் இன்று வரை இந்த குவாசர் அறியப்படாதது ஆச்சரியமாக இருக்கிறது” என்று இணை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஓன்கென் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“