BSNL 107 vs 153 Recharge Plan:
ஜியோ, ஏர்டெல் மற்றும் வி.ஐ போன்ற முக்கிய தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கட்டண உயர்வைத் தொடர்ந்து பி.எஸ்.என்.எல் பிரபலமடைந்து வருகிறது. பி.எஸ்.என்.எல் நாடு முழுவதும் 4ஜி சேவையையும் அறிமுகம் செய்து வருவது பயனர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது.
ஜியோ, ஏர்டெல் பயனர்கள் பலரும் பி.எஸ்.என்.எல்-க்கு மாறி வருகின்றனர். பி.எஸ்.என்.எல் குறைந்த விலையில் திட்டங்களை வழங்குகிறது. அதிலும் குறிப்பாக ரூ. 153 மற்றும் ரூ. 107 மாதாந்திர திட்டம் பற்றி பார்ப்போம்.
பி.எஸ்.என்.எல் ரூ.107 திட்டம்
பஎஸ்என்எல் ரூ.107 திட்டம் குறைந்த டேட்டா உபயோகம் உள்ள பயனர்களுக்கு இது மிகவும் பொருத்தமாக இருக்கும. இந்த திட்டம் அதன் நீட்டிக்கப்பட்ட 35 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தின் காரணமாக தனித்து நிற்கிறது.
இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் வசதிக்குப் பதிலாக, அனைத்து நெட்வொர்க்குகளிலும்
200 நிமிட அழைப்புகளை கொண்டுள்ளது. இது தவிர, இந்த ரீசார்ஜ் திட்டத்தில் பயனர்கள் 3ஜிபி 4ஜி டேட்டாவைப் பெறுவார்கள்.
பி.எஸ்.என்.எல் ரூ.153 திட்டம்
இந்த திட்டத்தின் விலை ரூ.153 மற்றும் அதிக டேட்டா பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டம் அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் காலிங்கை வழங்குகிறது. பயனர்கள் 26ஜிபி 4ஜி டேட்டாவைப் பெறுவார்கள் மேலும் 26ஜிபி டேட்டாவுக்குப் பிறகு வேகம் 40கேபிபிஎஸ் ஆகக் குறையும். இந்த திட்டம் 26 நாட்களுக்கு செல்லுபடியாகும்.அதோடு சில ஓ.டி.டி தளங்கள் சந்தாவும் வழங்கப்படுகிறது.
எது பெஸ்ட்?
குறைந்த டேட்டா உடன் அதிக வேலிடிட்டி பெற வேண்டும் என்று நினைத்தால் ரூ.107 திட்டம் சிறந்தது. அதே நேரம் டேட்டா ஓ.டி.டி தள சந்தா வேண்டும் என்றால் ரூ.153 திட்டம் சிறந்ததாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“