அபிநந்தன் 151 ப்ரீபெய்ட் ப்ளான்களில் புதிய மாற்றங்கள்… நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டா

இந்த ப்ளானில் நாள் ஒன்றுக்கு வாடிக்கையாளர்கள் 100 இலவச குறுஞ்செய்திகளை அனுப்பிக் கொள்ள இயலும். 

BSNL SIM card replacement cost
BSNL SIM card replacement cost

BSNL 151 Abhinandan prepaid plans : ராணுவ வீரர் அபிநந்தனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் அவருடைய பெயரில் ப்ரீபெய்ட் ப்ளான்களை வெளியிட்டது.  போன் கால்கள் மற்றும் டேட்டாவிற்காகவே உருவாக்கப்பட்ட இந்த ப்ளான் முன்பு வாடிக்கையாளர்களுக்கு 1ஜிபி டேட்டாவை வழங்கி வந்தது.

BSNL 151 Abhinandan prepaid plans

24 மணி நேரமும் ஆன்லைனில் இருக்கும் டிஜிட்டல் பறவைகளுக்கு இந்த டேட்டா நிச்சயமாக பத்தாது. அவர்களையும் கருத்தில் கொண்டு 1.5ஜிபி டேட்டாவை தற்போது வாடிக்கையாளர்களுக்கு அளிக்க முடிவு செய்துவிட்டது பி.எஸ்.என்.எல்.

இதன் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். இதே அளவிற்கான டேட்டாவை ஜியோவும் ரூ. 148க்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இரண்டுக்குமான வித்தியாசம் என்னவென்றால் பி.எஸ்.என்.எல் 3ஜி, ஜியோ 4ஜி. சமீபமாகவே பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4ஜி சேவையை ஆந்திராவில் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அபிநந்தன் ப்ளான் ஆந்திராவில் மட்டும் 4ஜி வேகத்தில் இயங்கும்.

ஏனைய இந்தியாவில் 3ஜியில் மட்டுமே இந்த டேட்டாவை வாடிக்கையாளர்கள் பெற இயலம். இந்த ப்ளானில் நாள் ஒன்றுக்கு வாடிக்கையாளர்கள் 100 இலவச குறுஞ்செய்திகளை அனுப்பிக் கொள்ள இயலும்.

மேலும் படிக்க : விவோவின் புதிய ஸ்மார்ட்போன் அசத்தல் நிறங்களில்

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bsnl 151 abhinandan prepaid plans give 1 5gb data per day

Next Story
“உலக தொழில்நுட்ப வரலாற்றில் முதன்முறையாக” – வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ரியல்மீRealme X2 Pro supports SuperVOOC flash charge
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com