பிஎஸ்என்எல் சந்தாதாரர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி. அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் தனது சந்தாதாரர்களுக்காக பல புதிய 4ஜி டேட்டா பிளான்களுடன் வந்துள்ளது. ஆனாலும் பிஎஸ்என்எல் தனது 4ஜி சேவையை நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும்தான் வழங்கி வருகிறது. சமீபத்தில் பிஎஸ்என்எல் ஒரு புதிய 4ஜி ப்ரீபெய்ட் பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது அதில் ஒரு நாளைக்கு 10 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த பிளானின் விலை 96 ரூபாய் மேலும் இதன் வேலிடிட்டி 28 நாட்கள். இதே போல் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் மற்றோரு பிளான் ரூபாய் 236 க்கு கிடைக்கிறது. இது தவிர பிஎஸ்என்எல் 80ஜிபி டேட்டாவை ரூபாய் 96 க்கு 28 நாட்கள் வேலிடிட்டியுடனும், 2360 ஜிபி டேட்டாவை ரூபாய் 236 க்கு 84 நாட்கள் வேலிடிட்டியுடனும் அறிமுகப்படுத்தியுள்ளது.
கொரோனாவால் இன்னும் என்னென்ன நிகழப் போகிறது? ரத்தானது MWC கண்காட்சி!
இதே நேரத்தில் வோடபோன் நிறுவனத்தின் ரூபாய் 499 பிளானில் தினம் 1.5 ஜிபி டேட்டா மற்றும் தினம் 100 எஸ்எம்எஸ் கள் 70 நாட்கள் வேலிடிட்டியுடன் வந்துள்ளாது. அதே போல் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தியுள்ள ரூபாய் 555 பிளானில் 1.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் கள் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வந்துள்ளது. இவைதவிர ஏர்டெல் நிறுவனம் ரூபாய் 249 பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 1.5 ஜிபி டேட்டா 24 நாட்கள் வேலிடிட்டியுடன் அளவில்லா உள்ளூர், ரோமிங் மற்றும் எஸ்டிடி கால்கள் மற்றும் தினம் 100 எஸ்எம்எஸ் உடன் வந்துள்ளது.
இந்த முக்கிய தொலைதொடர்பு நிறுவனங்களின் பிளான்களை ஒப்பிட்டு பார்க்கும் போது பிஎஸ்என்எல் லின் பிளான்கள் தான் மற்ற நிறுவன பிளான்களை விட விலை மலிவானதாக உள்ளது.
வாட்ஸ்ஆப்பின் 'மைல்ஸ்டோன்’ சாதனை... பயனர்களின் நம்பிக்கை தான் காரணம்!
கடந்த வருடம் பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் மற்ற் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு செய்யும் அளவில்லா இலவச கால்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவை நிர்ணயம் செய்ய முடிவுசெய்தது. 28 நாட்கள் வேலிடிட்டி பிளானில் மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு செய்யும் கால்களுக்கு 1000 நிமிடங்கள் என்றும் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் பிளான்களுக்கு 3,000 நிமிடங்கள் என்றும் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் பிளான்களுக்கு 12,000 நிமிடங்கள் என்றும் நிர்ணயம் செய்து அதை கடந்த டிசம்பர் 3ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil ”