பி.எஸ்.என்.எல் 4ஜி போஸ்ட்பெய்ட் சேவைகள்… 120ஜிபி டேட்டாவுடன் அசத்தல் பேக்கேஜ்…

இலவச உள்ளூர் வெளியூர் அழைப்புகள், 100 எஸ்.எம்.எஸ்கள், ஒரு வருடத்திற்கான இலவச அமேசான் ப்ரைம் சேவை

BSNL Recharge Offer, BSNL prepaid recharge plans offer 2018, BSNL 4G Postpaid services

BSNL 4G Postpaid services : பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு நிறுவனம், தொடர்ந்து தங்களின் வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவைகளை வழங்கி வருகிறது. ஏற்கனவே ஜியோவைப் போல் வருடாந்திர ப்ளான்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

BSNL 4G Postpaid services – சென்னையில் அறிமுகம்

ஆனால் தற்போது தான் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது பி.எஸ்.என்.எல். சென்னையில் அறிமுகமாகியிருக்கும் இந்த சேவை தொடர்ந்து தேசம் எங்கும் அறிமுகப்படுத்தப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

தங்களின் பழைய சிம் கார்ட்களில் இருந்தோ, அல்லது வேறு நிறுவனங்களின் சேவைகளில் இருந்தோ புதிதாக பி.எஸ்.என்.எல் 4ஜி சேவைக்கு அப்கிரேட் ஆகும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிமுக சேவையை தற்போது வழங்க திட்டமிட்டுள்ளது.

798 ரூபாய்க்கு போஸ்ட்பெய்ட் சேவையை அறிமுகப்படுத்தியுள்ள பி.எஸ்.என்.எல், தங்களின் வாடிக்கையாளர்களுக்கு 120 ஜிபி டேட்டாவை ஒரு மாதத்திற்கு வழங்குகிறது. தற்போது ஜியோ ப்ளான்கள் கூட மாதத்திற்கு 2ஜிபி வரையில் தான் டேட்டாவை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சேவையில் அன்லிமிட்டட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், 100 எஸ்.எம்.எஸ்கள் மற்றும் ஒரு வருடத்திற்கான இலவச அமேசான் ப்ரைம் சேவைகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : எல்லாமே அன்லிமிட்டட் தான்… பி.எஸ்.என்.எல்.-ன் வருடாந்திர 4ஜி சேவைகள்

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bsnl 4g postpaid services introduced in chennai

Next Story
தடை செய்யப்படுகிறதா பப்ஜி கேம்? இது என்ன விளையாட்டு பிரியர்களுக்கு வந்த சோதனை!PUBG update
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express