அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல்-ன் 4ஜி தொழில்நுட்பம் 5-7 மாதங்களில் 5ஜிக்கு மேம்படுத்தப்பட்டு, நாட்டில் உள்ள 1.35 லட்சம் டெலிகாம் டவர்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய தொலைத்தொடர்பு மற்றும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
சிஐஐ நிகழ்வில் பேசிய அமைச்சர், உள்நாட்டு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியை ஆண்டுக்கு ரூ.500 கோடியில் இருந்து ரூ.4,000 கோடியாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
அப்போது, கோடக் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி உதய் கோடக்கின் டெலிகாம் துறையில் பிஎஸ்என்எல் பங்கு பற்றிய கேள்விக்கு பதிலளித்த வைஷ்ணவ், தொலைத்தொடர்பு துறையில் பிஎஸ்என்எல் மிகவும் வலுவான நிலைப்படுத்தும் காரணியாக மாறும் என்றார்.
மேலும், BSNL நாடு முழுவதும் சுமார் 1,35,000 மொபைல் டவர்களைக் கொண்டுள்ளது, கிராமப்புறங்களில் மிகவும் வலுவான இருப்பு உள்ளது, அவை இன்னும் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களால் முழுமையாக மூடப்படவில்லை என்று அவர் கூறினார்.
தொடர்ந்து, இந்திய ரயில்வே 1 மில்லிமீட்டர் விளிம்புடன் வந்தே பாரத் போகியை வடிவமைத்துள்ளதாகவும், இது ஏற்றுமதி தர வடிவமைப்பாக உள்ளது என்று 18 நாடுகளின் முன்னணி செய்தித் தாள்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/