பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல 'பம்பர் ஆஃபர்களை’ கடந்த செப்டம்பரில் அறிவித்தது. இந்த ஆஃபர் ஜனவரி 31-ம் தேதியுடன் முடிந்துவிடும் என முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இது ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதோடு வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 2.2 ஜிபி டேட்டாவையும் நாளொன்றுக்கு வழங்குகிறது.
ரூ.186, ரூ.429, ரூ.485, ரூ.666, ரூ.999, ரூ.1,699 மற்றும் ரூ.2,099 போன்ற ரீ-சார்ஜின் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த கூடுதல் டேட்டா சேவையைப் பெறலாம்.
குறிப்பாக ரூ.186, ரூ.429 மற்றும் ரூ.999 பிளான்களை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த 'பம்பர் ஆஃபரில்’ தினமும் 3.2 ஜிபி டேட்டா கிடைக்கும். ரூ.485, ரூ.666 பிளானை தேர்வு செய்திருப்பவர்கள் தினமும் 3.7 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். அதே நேரம் ரூ.1,699 பிளானில் இருப்பவர்கள் தினம் 4.2 ஜிபி டேட்டாவையும், ரூ.2,099-க்கு ரீ சார்ஜ் செய்பவர்கள் 6.2 ஜிபி டேட்டாவையும் பெறலாம்.
இதில் ரூ.186-28 நாட்களும், ரூ.429 - 81 நாட்களும், ரூ.485-90 நாட்களும் வேலிடிட்டி உண்டு. அதோடு ரூ.999-181, ரூ.1,699 மற்றும் ரூ.2,099-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி உண்டு.