தமிழ்நாடு ஸ்பெஷல்: பி.எஸ்.என்.எல். தினமும் 1.8 ஜி.பி. காம்போ... மிஸ் பண்ணாதீங்க!

BSNL: சமீபத்தில் தனது வசந்தம் கோல்ட் பிவி 96 (Vasantham Gold PV 96) ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டியை 90 நாட்களிலிருந்து வெறும் 60 நாட்களாக...

BSNL New Prepaid Plan: இரண்டு நாட்களுக்கு தினமும் 1.8GB டேட்டா வீதம் வழங்கும் பிஎஸ்என்எல்-லின் காம்போ 18 ப்ரீபெய்ட் திட்டம் தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் தனது காம்போ 18 ப்ரீபெய்ட் திட்டத்தை தமிழ் நாடு சந்தாதாரர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் ஏற்கனவே பல்வேறு தொலைத் தொடர்பு வட்டங்களில் கிடைத்து வந்தது. இப்போது தமிழ்நாடு தொலை தொடர்பு வட்டத்தில் உள்ள சந்தாதாரர்களும் இது கிடைக்கிறது. இரண்டு நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டத்தில் சந்தாதாரர்களுக்கு 1.8GB அதிவேக டேட்டா தினமும் கிடைக்கிறது. மேலும் பயனர்கள் நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் மற்றும் பிஎஸ்என்எல் அல்லாத எண்களுக்கு 250 நிமிடங்கள் இலவச அழைப்புகள் செய்யும் வசதியும் கிடைக்கிறது.

வருமான வரி புதிய விகிதம்: இந்த முக்கிய முடிவை கவனமாக தேர்வு செய்யுங்கள்!

தினசரி டேட்டா வரம்பு முடிந்த பிறகு சந்தாதாரர்கள் 80Kbps வேகத்தில் டேட்டாவை தொடர்ந்து பயன்படுத்தலாம். தமிழ்நாடு தவிர சட்டிஸ்கர், சண்டிகர், சென்னை, டாமன் மற்றும் டயூ, தாத்ரா மற்றும் நாகர் கவேலி (Dadra and Nagar Haveli), குஜராத், கோவா, ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், ஜம்மூ காஷ்மீர், கர்நாடக, கேரளா, லடாக், லக்‌ஷதீப், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் கிழக்கு, உத்தர பிரதேசம் மேற்கு மற்றும் உத்தரகாண்ட் ஆகிய இதர வட்டங்களிலும் காம்போ 18 திட்டம் கிடைக்கிறது.

தொலைதொடர்பு ஆபரேட்டர் பிஎஸ்என்எல் தனது தமிழ்நாடு வட்டத்தில் பல்வேறு மாற்றங்களை அறிவித்து வருகிறது. சமீபத்தில் தனது வசந்தம் கோல்ட் பிவி 96 (Vasantham Gold PV 96) ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டியை 90 நாட்களிலிருந்து வெறும் 60 நாட்களாக குறைத்துள்ளது. ஆனால் அதன் நன்மைகள் அப்படியே தொடர்கின்றன, அதாவது நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்கள் குரல் அழைப்புகள் எந்த நெட்வொர்க்குக்கு வேண்டுமானாலும் செய்யும் வசதி மற்றும் ஒரு நாளைக்கு 100 குறுஞ்செய்திகளும் கிடைக்கிறது. இருப்பினும் இந்த சலுகைகள் 21 நாட்களுக்கு மட்டும் தான் கிடைக்கும் அதற்கு பிறகு சந்தாதாரர்கள் இன்கம்மிங் அழைப்புகளை மட்டும் தான் இலவசமாக பெற முடியும். 21 நாட்களுக்கு பிறகு அவுட்கோயிங் அழைப்புகளுக்கு நிமிடத்துக்கு ஒரு ரூபாய் என்ற அளவில் கட்டணம் வசூலிக்கப்படும். Local குறுஞ்செய்தி ஒன்றுக்கு ரூபாய் 0.80 என்றும் தேசிய குறுஞ்செய்தி ரூபாய் 1.20 என்றும் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் இந்த திட்டத்தில் டேட்டா நன்மைகள் கிடையாது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close