ரூ.299 விலையில் பிஎஸ்என்எல் டிஎஸ்எல் பிராட்பேண்ட் சேவை!

BSNL DSL Broadband service is offering 100GB data for Rs299 plans Tamil News இந்த பிராட்பேண்ட் திட்டத்தின் மூலம் பயனர்கள் அன்லிமிடெட் இணையத்தைப் பெறுவார்கள்.

BSNL DSL Broadband service is offering 100GB data for Rs299 plans Tamil News
BSNL DSL Broadband service is offering 100GB data for Rs299 plans Tamil News

BSNL DSL Broadband service is offering 100GB data for Rs299 plans Tamil News : பிஎஸ்என்எல்-ன் டிஎஸ்எல் பிராட்பேண்ட் சேவை ரூ.299 திட்டத்தை வழங்குகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு 100 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இருப்பினும், இதன் வேகம் 10Mbps கொண்டு மிகவும் குறைவாக உள்ளது. டேட்டா தீர்ந்ததும், அதன் வேகம் மேலும் 2Mbps-ஆகக் குறைக்கப்படும்.

இந்த பிராட்பேண்ட் திட்டம் ஆறு மாதங்களுக்கு புதிய பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதன் பிறகு 200 ஜிபி CUL திட்டத்திற்கு மாற்றப்படும். இதன் விலை, ரூ.399. இந்த திட்டம் 200 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஆனால், அதே 10 எம்.பி.பி.எஸ் வேகம் கிடைக்கும் என்று டெலிகாம்டாக் தெரிவித்துள்ளது.

ரூ.555, ரூ.779, ரூ.949 மற்றும் ரூ.1,299 உட்பட மற்ற திட்டங்களையும் நிறுவனம் கொண்டுள்ளது. இந்த பிராட்பேண்ட் திட்டங்கள் அனைத்தும் 500 எம்பி, 779 ஜிபி, 1100 ஜிபி மற்றும் 1600 ஜிபி டேட்டாவுடன் 10 எம்பிபிஎஸ் வேகத்தையும் வழங்குகிறது. மேலும், டிஜிட்டல் சந்தாதாரர் வரி (டிஎஸ்எல்) பொது மாற்றப்பட்ட தொலைபேசி நெட்வொர்க்கில் சேவைகளை வழங்குகிறது.

ஒப்பீட்டளவில், ரூ.500 விலையில் ஜியோ ஃபைபர் மற்றும் ஏர்டெல் XStream ஆகியவை 30 எம்பிபிஎஸ் மற்றும் 40 எம்பிபிஎஸ் வேகத்துடன் கொண்ட ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களை வழங்குகின்றன. JioFiber-ன் இந்த அடிப்படை பிராட்பேண்ட் திட்டத்தின் விலை ரூ.399. இது, 30Mbps வேகத்தில் உண்மையிலேயே அன்லிமிடெட் இணையத்தை வழங்குகிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்பையும் ஆதரிக்கிறது.

ஏர்டெல்லின் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் அடிப்படைத் திட்டத்தின் விலை ரூ.499. இது, 40Mbps வேகத்துடன் அன்லிமிடெட் இணையத்தை உள்ளடக்கியது. ஏர்டெல் XStream, Wynk Music, Shaw Academy, Voot Basic subscription, Eros Now, Hungama Play, Shemaroo M, மற்றும் Ultra ஆகியவற்றுக்கான இலவச சந்தா உட்பட இந்த திட்டம் மற்ற நன்மைகளையும் வழங்குகிறது.

டாடா ஸ்கை, பிராட்பேண்ட் திட்டங்களையும் கொண்டுள்ளது மற்றும் அதன் விலை ரூ.649-லிருந்து தொடங்குகிறது. இது அடிப்படை 50 எம்.பி.பி.எஸ் திட்டம். மேலும், இது மாதாந்திர திட்டம் மற்றும் லேண்ட்லைன் இணைப்பை சேர்க்கவில்லை. இந்த பிராட்பேண்ட் திட்டத்தின் மூலம் பயனர்கள் அன்லிமிடெட் இணையத்தைப் பெறுவார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bsnl dsl broadband service offers 100gb data for rs 299 plan

Next Story
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் கால நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது!Instagram reels length limit expanded Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com