இந்திய அரசின் பி.எஸ்.என்.எல் தொலைத் தொடர்பு நிறுவனம் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக ஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்தில் ஓ.டி.டி நன்மைகள் கொண்ட சேவைகளை வழங்குகிறது. பி.எஸ்.என்.எல்லின் 2 பிராட்பேண்ட் திட்டங்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா மற்றும் சில OTT (ஓவர்-தி-டாப்) நன்மையுடன் வருகின்றன. இதன் விலை ரூ. 1000-க்கு கீழ் உள்ளது.
பி.எஸ்.என்.எல் ரூ.799 மற்றும் ரூ.999 பிராட்பேண்ட் திட்டங்கள்
பி.எஸ்.என்.எல் வழங்கும் ரூ.799 மற்றும் ரூ.999 பிராட்பேண்ட் திட்டங்கள் பயனர்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இலவச சந்தாவை வழங்குகிறது. அது மட்டுமல்லாமல், மற்ற OTT நன்மைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த திட்டங்களுடன் 18% ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும் என்பதை நினைவில் கொள்க.
பி.எஸ்.என்.எல் வழங்கும் ரூ.799 திட்டமானது 100 Mbps வேகம் மற்றும் 1000GB அல்லது 1TB டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டத்துடன் இணைந்த OTT நன்மைகள் Disney+ Hotstar, SonyLIV, ZEE5 மற்றும் YuppTV.
பி.எஸ்.என்.எல் வழங்கும் ரூ. 999 திட்டமானது 150 Mbps வேகம் மற்றும் 2000GB அல்லது 2TB டேட்டாவுடன் வருகிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஹங்காமா, ஷெமரூ, சோனி லவ், ZEE5 மற்றும் YuppTV ஆகியவை இந்த திட்டத்தில் உள்ள OTT நன்மைகள் ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“