scorecardresearch

பி.எஸ்.என்.எஸ் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்: தினமும் 3ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்; இப்பவே செக் பண்ணுங்க

பி.எஸ்.என்.எஸ் ரூ.299 விலையில் தினமும் 3ஜிபி டேட்டா உடன் 30 நாட்கள் வேலிடிட்டி உள்ள ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது.

BSNL 4G to be upgraded to 5G in 5-7 months and rolled out across 1.35 lakh towers
BSNL

மத்திய அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எஸ் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. மொபைல் ரீசார்ஜ், வைஃபை சேவைகளையும் பி.எஸ்.என்.எஸ் வழங்குகிறது. பி.எஸ்.என்.எஸ் வைஃபை சேவைகளை பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் நிலையில், மொபைல் ரீசார்ஜ் திட்டங்களை பயன்படுத்துவதில்லை. காரணம் 4ஜி டேட்டா சேவைகளைக் கூட பி.எஸ்.என்.எஸ் இன்னும் வழங்கவில்லை. இந்தியாவில் 5ஜி கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டு ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவைகளை போட்டி போட்டு விரிவுபடுத்தி வருகிறது. இருப்பினும் பி.எஸ்.என்.எஸ் பயனர்களுக்கு எளிமையான திட்டங்களை வழங்குகிறது. பி.எஸ்.என்.எஸ் அடுத்தாண்டு 5ஜியை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறியுள்ளது.

பி.எஸ்.என்.எஸ் ரூ.299 திட்டம்

ரூ.299 திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதி, ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் ஆகியவைகளை வழங்குகிறது. ஜியோ, ஏர்டெல், வி.ஐ போன்று பி.எஸ்.என்.எஸ் கூடுதல் பலன்கள் ஓ.டி.டி பலன்களை வழங்கவில்லை. இந்த திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. அதாவது இந்த திட்டத்தின் ஒரு நாள் செலவு தோராயமாக ரூ.10 ஆகும்.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் பயனர் பெறும் மொத்த டேட்டா 90ஜிபி ஆகும். இதனால், ஒவ்வொரு ஜிபி டேட்டாவின் விலை ரூ. 3.32 மட்டுமே. இது தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் விலையை விட மிகவும் மலிவானது ஆகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Bsnl heavy data prepaid plan under rs 300