BSNL New Broadband Service : ஜியோ ஃபைபர் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் ஆகிய இரண்டு நிறுவனங்களும் பயனர்களுக்கு புதிய ப்ராட்பேண்ட் திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளன. மேலும், அரசாங்கத்திற்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனம் பிஎஸ்என்எல், பயனர்களின் கவனத்தை ஈர்க்க புதிய ஃபைபர் பேசிக் ப்ளஸ் திட்டத்தையும் தொடங்க உள்ளது. ஃபைபர் பேசிக் ப்ளஸ் திட்டத்தின் விலை ரூ.599 மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் திட்டத்தின் விலை ரூ.499.
பிஎஸ்என்எல்-ன் புதிய ஃபைபர் பேசிக் ப்ளஸ் திட்டம், 6000 Mbps வேகத்தை 3300 ஜிபி வரை வழங்குகிறது. இந்த திட்டம் பயனர்களுக்கு அன்லிமிடெட் டேட்டா நன்மைகளுடன் வருகிறது. பயனர்கள் தங்களின் மாதாந்திர FUP வரம்பைப் பயன்படுத்திய பிறகு, அதன் வேகம் 2Mbps-ஆகக் குறைக்கப்படும். இருப்பினும், FUP வரம்பை அடைந்த பிறகு 2Mbps வேகத்தில் பதிவிறக்கம் அல்லது பதிவேற்றம் செய்வதற்கான வரம்பு எதுவுமில்லை.
மேலும், தனது புதிய ஃபைபர் பேசிக் ப்ளஸ் திட்டத்துடன் அன்லிமிடெட் அழைப்பை இணைத்துள்ளது பிஎஸ்என்எல். இந்த புதிய பிராட்பேண்ட் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் பயனர்கள் இந்தியாவுக்குள் உள்ள எந்தவொரு நெட்வொர்க்குக்கும் 24 மணிநேர வரம்பற்ற அழைப்பைப் பெறுவார்கள்.
இப்போதைக்கு, பயனர்கள் மாதாந்திர சந்தாவை மட்டுமே தேர்வு செய்ய முடியும். பிஎஸ்என்எல் ஃபைபர் பேசிக் ப்ளஸ் திட்டம் நீண்ட கால பேக்கேஜ்ஜில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்என்எல்-ன் ஃபைபர்-டு-ஹோம் (FTTH) சேவைகளை வழங்கும் அனைத்து வட்டங்களிலும் ஃபைபர் பேசிக் ப்ளஸ் திட்டம் தொடங்கப்படும். மேலும் இந்த புதிய பிராட்பேண்ட் திட்டம் அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் கிடைக்காது. இந்தத் திட்டம் இந்த ஆண்டு நவம்பர் 11 முதல் ஆக்டிவேட் செய்யப்படும்.
ரூ.599 பிராட்பேண்ட் திட்டத்துடன், இணைய சேவை வழங்குநரும் (ஐஎஸ்பி), 449 ரூபாய் விலையுள்ள ஃபைபர் அடிப்படை திட்டத்தைத் திருத்தியுள்ளது. பிஎஸ்என்எல் ஃபைபர் அடிப்படை திட்டம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைத் தவிர அனைத்து இடங்களிலும் கிடைக்கும். பிஎஸ்என்எல்லில் இருந்து நுழைவு நிலை பிராட்பேண்ட் திட்டம் பயனர்களுக்கு 3.3 டிபி வரை 30 எம்.பி.பி.எஸ் வேகத்தை வழங்குகிறது.
கடந்த செவ்வாயன்று, இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI), 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் சந்தா தரவுத்தளத்தைப் பகிர்ந்து கொள்ளும் புதிய அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, பிஎஸ்என்எல் ஒரு மாதத்தில் 10,000 ப்ராட்பேண்ட் பயனர்களை இழந்திருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் 7.85 மில்லியன் பயனர்களைப் பதிவுசெய்தது. முந்தைய மாதத்தில் 7.86 மில்லியன் பிராட்பேண்ட் பயனர்களைப் பதிவுசெய்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"