அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் 2 புதிய டேட்டா வவுச்சர் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. குறைந்த விலையில் ரூ.58, 59 விலையில் 2 புதிய டேட்டா திட்டம், அன்லிமிடெட் காலிங் வசதியுடன் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
பி.எஸ்.என்.எல் ரூ.58 ப்ரீபெய்ட் திட்டம்
பி.எஸ்.என்.எல்-ன் ரூ.58 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு டேட்டா வவுச்சராகும், மேலும் இதன் பலன்களைப் பயன்படுத்த பயனர் ஆக்டிவ் திட்டத்தை கொண்டிருக்க வேண்டும். ரூ.58 திட்டமானது 7 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 2ஜிபி தினசரி டேட்டாவுடன் வருகிறது.
ரூ.59 ப்ரீபெய்ட் திட்டம்
பி.எஸ்.என்.எல்-ன் ரூ.59 ப்ரீபெய்ட் திட்டம் 7 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் வசதியுடன் வழங்கப்படுகிறது. இதில் எஸ்.எம்.எஸ் வசதி கிடையாது. பி.எஸ்.என்.எல்லின் இந்த 2 புதிய திட்டங்கள் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“