/indian-express-tamil/media/media_files/2025/05/05/ZpzOAgdxM3vtqXDugh8G.jpg)
ரீசார்ஜ் செய்வதற்காகவே மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வைக்க வேண்டிய அளவிற்கு, அதன் பிளான்களின் விலை அதிகரித்து வருகிறது. இதனால், சாமானிய மக்களின் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எனினும், மற்ற நிறுவனங்களைப் போன்று அல்லாமல் வாடிக்கையாளர்களின் பர்ஸை பதம் பார்க்காத வகையில் அரசின் தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் சார்பாக பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதன் ரீசார்ஜ் பிளான்கள் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் குறைவான விலையில் இருப்பதால், பெரும்பாலானவர்கள் இதனை விரும்புகின்றனர்.
அந்த வகையில், பி.எஸ்.என்.எல் நிறுவனம் சார்பாக புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒரு அட்டகாசமான ரீசார்ஜ் பிளான் குறித்து இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இந்தப் பிளானின் விலை ரூ. 299 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இணையதள சேவையை அதிகமாக பயன்படுத்துபவர்களை கருத்திற்கொண்டு இந்த பிளான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இந்தப் பிளான் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு நாள்தோறும் 3 ஜிபி வரை டேட்டா கிடைக்கும்.
எனவே, அதிகமாக ஓடிடி-யில் படம் பார்ப்பவர்கள், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களை உபயோகிப்பவர்களுக்கு இந்த ரூ. 299 பிளான் பொருத்தமானதாக இருக்கும். இது தடையற்ற இணைய சேவையை வழங்குகிறது.
இந்தப் பிளானின் வேலிடிட்டி 30 நாட்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 30 நாட்களுக்கு 90 ஜிபி வரை இதன் டேட்டா இருக்கிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், அன்றைய நாளின் 3 ஜிபி டேட்டாவை முழுமையாக பயன்படுத்தி விட்டாலும், இணைய சேவை தடைபடாது. அதன் வேகம் மட்டும் குறைக்கப்படும்.
Your network, your power. Power up your month with BSNL. Perfect for heavy data users who demand more.
— BSNL India (@BSNLCorporate) May 2, 2025
Stay connected, stay unstoppable.
Recharge nowhttps://t.co/BpQ0Erk16p#BSNLIndia#StayConnected#UnlimitedValue#ConnectedWithCare#BSNLRechargepic.twitter.com/MZeb2vIcXw
இது தவிர நாள்தோறும் 100 இலவச எஸ்.எம்.எஸ்-கள் அனுப்ப முடியும். மேலும், அன்லிமிட்டட் காலிங் வசதியும் இந்தப் பிளானுடன் இணைந்து வருகிறது. இதன் மூலம் இந்த ஒரே பிளானில் காலிங், எஸ்.எம்.எஸ் மற்றும் இணைய சேவை என அனைத்து வசதிகளும் ஒன்றாக கிடைக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.