/tamil-ie/media/media_files/uploads/2017/10/bsnl-750.jpg)
BSNL Rakhi Rs 399 Prepaid recharge offer 2018
BSNL Offer : பிஎஸ்என்எல் தற்போது ராக்கி சலுகையை வெளியிட்டிருக்கிறது. 399 ரூபாய்க்கு ப்ரீபெய்ட் ரீச்சார்ஜ் செய்வதன் மூலமாக அன்லிமிட்டட் அழைப்புகள், இணைய வசதி, மற்றும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி ஆகியவற்றை பெற இயலும்.
சகோதரத்துவத்தின் அன்பையும் பாசத்தினையும் வெளிப்படுத்தும் ஒரு உன்னத திருநாளாக கொண்டாடப்படுகிறது ரக்ஷா பந்தன்.
இந்த ஆஃபரை இன்றிலிருந்து வாடிக்கையாளார்களுக்கு பயன்பாட்டிற்கு வருகிறது. இந்த ஆஃபரின் மூலம் ரிங் பேக் டோனில் பாடலை மாற்றும் வசதியினையும் பெற்றுக் கொள்ளலாம்.
பெருநகரங்களான மும்பை மற்றும் டெல்லி வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஆஃபரின் வேலிடிட்டி 74 நாட்களாகும்.
To read this article in English
இந்த ஆஃபரினை அறிமுகப்படுத்தி பேசிய பிஎஸ்என்எல் தலைமைச் செயல் அதிகாரி அனுப்பம் ஸ்ரீவஸ்தவா பேசுகையில் “சகோதர சகோதரிகளுக்கு இடையேயான அன்பின் வெளிப்பாட்டை உணர்த்துவது தான் ரக்ஷா பந்தன். இந்நாளில் நாங்கள் இந்த ஆஃபர் குறித்து அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று கூறினார்.
எண்ட்ரி லெவல் பிஎஸ்என்எல் ஆஃபர் (Entry level BSNL Offer )
மிக சமீபத்தில் எண்ட்ரி லெவல் ப்ரீபெய்ட் ரீச்சார்ஜாக 27 ரூபாய் சலுகை ஒன்றை அறிமுகப்படுத்தியது பிஎஸ்என்எல். அதன் மூலம் 1 ஜிபி டேட்டாவையும், அன்லிமிட்டட் கால்களையும், 300 குறுஞ்செய்திகளையும் இலவசமாக அளித்து அறிவித்தது. அதன் வேலிடிட்டி 7 நாட்களாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.