பி.எஸ்.என்.எல் வழங்கும் ரீசார்ஜ் திட்டங்கள் மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் திட்டத்தை விட விலை குறைவாகவும் அதிக டேட்டா பலன்களும் இருக்கும். காரணம் பி.எஸ்.என்.எல் இன்னும் 4ஜி அல்லது 5ஜி தொழில்நுட்பத்திற்கு அப்டேட் செய்யப்பட வில்லை. எனினும் பி.எஸ்.என்.எல் தற்போது 4ஜி தொழில்நுட்பத்தை விரிவுபடுத்தி வருகிறது. விரைவில் 4ஜி அறிமுகம் செய்து அதிலிருந்து 5ஜி தொழில்நுட்பத்திற்கு மாற்ற நாட்டின் அரசாங்க தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் திட்டமிட்டுள்ளது.
அந்தவகையில் இந்தியாவில் எந்த தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமும் வழங்காத ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தை பி.எஸ்.என்.எல் வழங்குகிறது.
ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்
பி.எஸ்.என்.எல் வழங்கும் ரூ.299 திட்டமானது தினசரி 3ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்தியாவில் தற்போது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ரூ.299 திட்டத்தில் இதுவே அதிகபட்ச டேட்டாவாகும். தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வழக்கமாக அதே விலையில் தினசரி 1.5ஜிபி டேட்டாவை வழங்குகின்றன.
அதே போல் பி.எஸ்.என்.எல் அதிக வேலிடிட்டியும் வழங்குகிறது. 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஏர்டெல், ஜியோ இதே திட்டத்தில் 28 நாட்களுகள் மட்டுமே வேலிடிட்டி வழங்குகின்றன.
இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதி, தினமும் 100 எஸ்.எம்.எஸ் ஆகிய அனைத்து பயன்களையும் பெற முடியும். எனினும் நீங்கள் மற்ற நிறுவனங்கள் வழங்கும் இலவச காலர் டியூன், மியூசிக் போன்ற வசதிகளைப் பெற முடியாது.
பி.எஸ்.என்.எல் 2025-ம் ஆண்டு இறுதிக்குள் உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் 4ஜி தொழில்நுட்பத்தை நிறுவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஒரு சாப்ட்வேர் அப்டேட் மூலம் 5ஜிக்கும் அப்கிரேடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“