BSNL Rs. 1,188 Long Term Prepaid Plan: பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம், தனியார் செல்போன் நிறுவனங்களுடன் போட்டிப்போடும் அளவில் புதிய புதிய திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில், பி.எஸ்.என்.எல் தமிழகத்தில் ரூ.1,188 விலையில் மருதம் பிரிபெய்ட் திட்டத்தை வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக ஜூலை 25 ஆம் தேதி அறிமுகப்படுத்தியது.
பி.எஸ்.என்.எல்-இன் மருதம் பிரிபெய்ட் திட்டம் மூலம் வாடிக்கையாளர்கள் ரூ.1,188 செலுத்தி 5ஜிபி டேட்டாவுடன் நாடு முழுவதும் இலவச அழைப்புகள் மற்றும் தினமும் 1200 எஸ்.எம்.எஸ்-கள் அனுப்பலாம். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 345 நாட்கள் ஆகும். இந்த திட்டம் குறைந்த டேட்டா சேவைகளை வழங்குவதால், 5ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு பயன்படுத்தப்படும் ஒவ்வொரு 1 எம்.பி டேட்டாவுக்கும் 25 பைசா கட்டணமாக வசூலிக்கப்படும்.
பி.எஸ்.என்.எல் நிறுவனம் ஆந்திராவில் ரூ.1,399 என்ற விலையிலும் தெலங்கானாவில் ரூ.1,001 என்ற விலையிலும் இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திய ஒரு வாரத்தில், இந்த புதிய மருதம் பிரிபெய்ட் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படுமா என்பது குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இதுமட்டுமில்லாமல், பி.எஸ்.என்.எல் சமீபத்தில் அறிமுகப்படுத்திய நீண்ட கால வேலிடிட்டி கொண்ட ரூ.1,399 பிரிபெய்ட் திட்டம் மூலம் வாடிக்கையாளர்கள் தினமும் 1.5 டேட்டா, 50 எஸ்.எம்.எஸ்-உடன் 270 நாட்கள் வேலிடிட்டியில் அளவில்லாத தொலைபேசிய அழைப்புகளைப் பெறலாம்.
இந்த ரூ.1,001 பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் 270 நாட்கள் வேலிடிட்டியை கொண்டுள்ளது. இருப்பினும் இது 9GB டேட்டா மற்றும் 270 மெசேஜ்கள் மற்றும் அளவில்லாத தொலைபேசி அழைப்புகளை மட்டுமே வழங்குகிறது.