/tamil-ie/media/media_files/uploads/2020/08/image-43-1.jpg)
BSNL Prepaid independence day New Offer
BSNL Tamil News, BSNL Prepaid Independence day New Offer rs399 scheme: ஆயிரம் இருந்தாலும் வேறு யாருக்கும் இந்தச் சிந்தனை வருமா? பி.எஸ்.என்.எல். சுதந்திர தினத்தையொட்டி அற்புத ஆஃபர் வழங்குகிறது. 80 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த பிளானில் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டட் கால்கள், 100 இலவச குறுஞ்செய்தி வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம், ரூ.399க்கு புத்தம் புதிய ரீசார்ஜ் திட்டத்தினை அறிமுகப்படுத்தி இருக்கிறது . 80 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த பிளானில் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டட் கால்கள், 100 இலவச குறுஞ்செய்தி வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இந்த, புதிய திட்டம், ஆகஸ்ட் 15 முதல் சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டத்தில் மட்டும் அறிமுகப்படுத்த இருக்கின்றன.
BSNL Prepaid Independence day New Offer rs399 scheme: பி.எஸ்.என்.எல் பிரீபெய்ட்
சொல்லப்பட்டுள்ள தினசரி FUP வரம்பை அடைந்ததும், வரம்பற்ற டேட்டாவை 80kbps என்ற குறைவான வேகத்தில் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த திட்டடத்தில், குரல் அழைப்புகளுக்கான அதன் தினசரி FUP வரம்பு - 250 (local + STD + outgoing roaming) நிமிடங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, ஒரு நாளைக்கு 100 குருஞ் செய்திகளையும் செய்திகளும், இலவச பிஎஸ்என்எல் ட்யூன்களும் இந்த திட்டம் உள்ளடக்குகிறது.
திட்டத்தை ஆக்டிவேட் செய்ய , வாடிக்கையாளர்கள் சி-டாப்அப் (C-TOPUP), செல்ப்- கேர், வெப் போர்டல் பயன்படுத்தலாம். செல்ப்- கேர் செயல்முறை மூலம் இந்த திட்டத்தை செயல்படுத்த PLAN BSNL399 என்று 123 எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் செய்ய வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.