பி.எஸ்.என்.எல் நிறுவனம் மான்சூன் டபுள் பொனான்சா சலுகையில் அதன் பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்தின் விலையை குறைத்து அறிவித்துள்ளது. மேலும் அன்லிமிடெட் டேட்டா வசதியும் வழங்குகிறது.
பி.எஸ்.என்.எல் ஃபைபர் பேஸிக் ப்ளான் திட்டத்தின் விலையை மாதத்திற்கு ரூ.499 ஆக இருந்ததை ரூ.399 ஆகக் குறைத்து அறிவித்துள்ளது.
இந்த பேஸிக் திட்டத்தில் முதல் மூன்று மாதங்களுக்கு ரூ.399 செலுத்த வேண்டும், அதன்பின் ரூ.499 செலுத்த வேண்டும். இந்த திட்டம் 60 எம்.பி.பி.எஸ் வேகத்தில் 3300 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது.
மேலும், முதல் முறை சந்தாதாரர்களுக்கு ஒரு மாத இலவச சேவையும் கிடைக்கும். புதிய பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்பை பெற 1800-4444 என்ற எண்ணுக்கு WhatsApp-ல் "Hi" என்று அனுப்புவதன் மூலம் முன்பதிவு செய்யலாம்.
பி.எஸ்.என்.எல் அண்மையில் புதிய இணைப்பு கட்டணத்தையும் குறைத்தது. அதனால் புதிய ஃபைபர் திட்டம் பெறுபவர்கள் இப்போது வாங்குவதை பணத்தை மிச்சம் செய்யலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.