Advertisment

பி.எஸ்.என்.எல் : 9 மற்றும் 29 ரூபாய் ப்ரீபெய்ட் பிளான்களில் மாற்றம்

BSNL Rs 9, Rs 29 prepaid recharge plans offer : இந்த இரண்டு பேக்குகளின் டேட்டாக்களை மட்டும் குறைத்து விற்பனை செய்ய உள்ளது பி.எஸ்.என்.எல்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
BSNL Recharge Offer, BSNL prepaid recharge plans offer 2018, BSNL 4G Postpaid services

BSNL Recharge Offer : சுதந்திர தினத்தை முன்னிட்டு பி.எஸ்.என்.எல் நிறுவனம் ஃப்ரீடம் ஆஃபர் - சோட்டா பேக் என்று இரண்டு சலுகைகளை அறிவித்திருந்தது. 9 ரூபாய்க்கு ப்ரீபெய்ட் ரீச்சார்ஜ் செய்தால் அன்லிமிட்டட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 100 மெசேஜ்கள், மற்றும் 2ஜிபி என டேட்டா என அறிவித்திருந்தது. அதன் வேலிடிட்டி ஒரு நாள் மட்டுமே.

Advertisment

To read this article in English

அதே போல் ஒரு வாரம் வரை பயன்படுத்தக் கூடிய வகையில் 29 ரூபாய்க்கான ப்ரீப்பெய்ட் ஆஃபர் ஒன்றை வழங்கியிருந்தது அந்த நிறுவனம். அதன்படி அன்லிமிட்டட் தேசிய மற்றும் உள்ளூர் அழைப்புகள், வாரத்திற்கு 300 இலவச மெசேஜ்கள் மற்றும் ஃப்ரீ காலர் ட்யூன் வசதிகளுடன் 14 ஜிபி டேட்டாவினை வழங்கி வந்தது.

தற்போது இந்த இரண்டு பேக்குகளின் டேட்டாக்களை மட்டும் மாற்றி வழங்கி வருகிறது. புதிய அறிவிப்பின் படி 9 ரூபாய் ப்ரீபெய்ட் டேட்டா 1ஜிபியாக குறைக்கப்பட்டிருக்கிறது. 29 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டத்தின் டேட்டாவும் 1ஜிபியாக குறைக்கப்பட்டிருக்கிறது.

Bsnl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment