/tamil-ie/media/media_files/uploads/2019/02/a703.jpg)
Mobile Number Portability MNP New Rules
BSNL Rs 108 prepaid plan offers 1GB data, unlimited calls : பி.எஸ்.என்.எல் தனியார் நிறுவனங்களுக்கு இணையாக புதிய புதிய ப்ளான்களை அறிமுகம் செய்து அசத்தி வருகிறது. தற்போது ரூ. 108-க்கு ப்ரீபெய்ட் ப்ளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இந்த திட்டம் உங்களுக்கு நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டாவை தருகிறது. அதே நேரத்தில் அன்லிமிட்டட் போன் கால்களையும், (250 நிமிடங்கள்) நீங்கள் பெற்றுக் கொள்ள இயலும். அதே போன்று அன்லிமிட்டட் மெசேஜ் சேவைகளையும் இந்த திட்டம் தருகிறது. ஆனால் இந்த ஆஃபர் சென்னை மற்றும் தமிழகத்திற்கு மட்டுமே. வேறு எங்கும் கிடையாது. இந்த பேக்கின் மூலம் டெல்லி மற்றும் மும்பையில் இருக்கும் எம்.டி.என்.எல் நெட்வொர்க்கில் நீங்கள் இலவசமாக பேசிக் கொள்ள இயலும்.
நாள் ஒன்றுக்கு 1ஜிபி முடிந்துவிட்டாலும் கூட 80kbps என்ற வேகத்தில் உங்களுக்கு இனைய சேவையை வழங்கிக் கொண்டிருக்கும். . இந்த பேக்குடன் ரூ. 349, ரூ. 399, ரூ. 447, ரூ. 485, ரூ. 666, ரூ. 1,699 போன்ற பேக்குகளின் டேட்டா சலுகையையும் அதிகரித்து அறிவித்துள்ளது. அதன்படி இந்த ப்ளான்படி ரீசார்ஜ் செய்தவர்கள் கூடுதலாக 1.5ஜிபி டேட்டாவை பெற்றுக் கொள்ளலாம்.
கேரளாவில் கடந்த மாதம் ரூ. 234க்கு ஒரு ரீசார்ஜ் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்து வைத்தது பி.எஸ்.என்.எல். 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த பேக்கின் டேட்டா ஆஃபர் 90ஜிபி ஆகும். நாள் ஒன்றுக்கு இவ்வளவு தான் பயன்பாடு என்று இல்லாமல் வேலிடிட்டி முடியும் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்தது.
மேலும் படிக்க : 455 நாட்களும் இலவசமாக பேசுங்கள்… பி.எஸ்.என்.எல் வழங்கிய அதிரடி ஆஃபர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.