/tamil-ie/media/media_files/uploads/2019/03/bsnl-agencies.jpg)
BSNL Rs 1699 annual prepaid plan
BSNL Rs 1699 annual prepaid plan: பி.எஸ்.என்.எல் நிறுவனம் 455 நாட்களுக்கான ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஒரு வருடத்திற்கான ப்ளான் இது என்றாலும், அக்டோபர் 31ம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்யும் நபர்களுக்கு கூடுதலாக 90 நாட்கள் வேலிடிட்டியை வழங்கி 455 நாட்கள் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் சிறப்பு சலுகை வழங்கி வருகிறது.
BSNL Rs 1699 annual prepaid plan benefits
1699 ரூபாய்க்கு நீங்கள் ரீசார்ஜ் செய்தால் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் பேசிக்கொள்ளலாம். மேலும் நாள் ஒன்றுக்கு வேலிடிட்டி முடியும் வரை 100 மெசேஜ்கள் அனுப்பிக் கொள்ளலாம்.
மேலும் 365 நாட்களுக்கு ரிங் பேக் டோன் அல்லது காலர் ட்யூன்களை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளவும் வழிவகை செய்கிறது இந்த ரிசார்ஜ் திட்டம்.
இந்த மாதத்தின் துவக்கத்தில் இருந்து விழாக்கள் அதிகப்படியாக கொண்டாடப்பட்டு வருவதால் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 1.5 ஜிபி டேட்டாவை இந்த மாதம் முழுவதும் பி.எஸ்.என்.எல் வழங்கிவருகிறது. அடுத்த மாதமும் அதற்கடுத்த மாதமும் கூடுதலாக 1ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் வழங்குகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.