ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா... அசத்தல் ஆஃபர்களை வழங்கும் பி.எஸ்.என்.எல்

BSNL Rs 187 Prepaid plan : நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா முடிவுற்றால் அதன் பின்னர், இணையம் 40kbps வேகத்தில் செயல்படும்.

BSNL Rs 186 Prepaid pack BSNL Rs 187 Prepaid plan : நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டாவை வழங்கும் பி.எஸ்.என்.எல் நிறுவனம். பி.எஸ்.என்.எல் நிறுவனம் தற்போது தனியார் அலைபேசி நெட்வொர் நிறுவனங்களுக்கு நிகராக ஆஃபர்களை அள்ளி வழங்கி வருகிறது. தற்போது ரூ. 186, ரூ. 187, ரூ. 153, ரூ. 118, ரூ. 192 ப்ரீபெய்ட் பேக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டாவை வழங்குவதாக அறிவித்துள்ளது அந்நிறுவனம்.

BSNL Rs 186 Prepaid pack BSNL Rs 187 Prepaid plan

இதற்கு முன்பு இந்த பேக் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டாவை தான் வழங்கிக் கொண்டிருந்தது. தற்போது 3ஜிபி வரையில் டேட்டாவை வழங்கி வருகிறது.

நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா முடிவுற்றால் அதன் பின்னர், இணையம் 40kbps வேகத்தில் செயல்படும்.

இதன் வேலிடிட்டி 28 நாட்களாகும்.

நாள் ஒன்றுக்கு நீங்கள் 250 நிமிடங்கள் இலவசமாக போனில் பேசிக் கொள்ளலாம்.

நூறு இலவச எஸ்.எம்.எஸ்களை அனுப்ப இயலும்.

BSNL  Rs 187 prepaid plan

இதற்கு முன்பு இந்த பேக்கும் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டாவை தான் வழங்கிக் கொண்டிருந்தது. ரிவைஸ் செய்யப்பட்ட பிறகு தற்போது 3ஜிபி வரையில் டேட்டாவை வழங்கி வருகிறது.

நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா முடிவுற்றால் அதன் பின்னர், இணையம் 40kbps வேகத்தில் செயல்படும்.

இதன் வேலிடிட்டி 28 நாட்களாகும்.

நாள் ஒன்றுக்கு நீங்கள் 250 நிமிடங்கள் இலவசமாக போனில் பேசிக் கொள்ளலாம்.

நூறு இலவச எஸ்.எம்.எஸ்களை அனுப்ப இயலும்.

மேலும் படிக்க : இனி பேருந்து எப்போது வரும் என காத்திருக்க தேவையில்லை… சென்னைவாசிகளுக்காக தயாராகும் புதிய ஆப்…

இதே போன்றும் ரூ. 192 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்கிலும் 3ஜிபி டேட்டா வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. 100 இலவச எஸ்.எம்.எஸ்களும், பெர்சனலைஸ்ட் ரிங்க்பேக் டோன்களையும் நமக்கு இந்த பேக் தருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close