BSNL Rs 187 Prepaid recharge plan for budget customers : பி.எஸ்.என்.எல் நிறுவனம் தற்போது தனியார் நிறுவனங்களுக்கு இணையாக தற்போது புதிய புதிய ஆஃபர்களை வெளியிட்டு வருகிறது. தற்போது பட்ஜெட் வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு புதிய ப்ரீபெய்ட் ப்ளான் ஒன்றை வெளியிட்டுள்ளது பி.எஸ்.என்.எல் நிறுவனம்.
Advertisment
ரூ. 187க்கு ரீசார்ஜ் செய்தால், வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 2.2ஜிபி டேட்டா கிடைக்கும். ஒரு நாளுக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ்கள் அனுப்பிக் கொள்ளலாம். இதன் வேலிடிட்டி 28 நாள் ஆகும்.
மற்ற தனியார் நிறுவனங்களைப் போன்று பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4-ஜி-யில் இயங்குவதில்லை. 3ஜி வேகத்தில் தான் அனைத்து இடங்களிலும் இயங்குகிறது. ஆனாலும் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு இணையாக தற்போது ப்ரீபெய்ட் ப்ளான்களை அறிமுகம் செய்து வருகிறது பி.எஸ்.என்.எல்.
ஜியோ நிறுவனமும் இதே கட்டணத்திற்கு இணையாக ப்ளான்களை அறிமுகம் செய்துள்ளது. ரூ. 198க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 2ஜிபி வரையில் டேட்டாவை பெற்றுக் கொள்ளலாம். இதன் வேலிடிட்டி 28 நாட்களாகும். அதே போன்று 100 மெசேஜ்கள் ஒரு நாளைக்கு அனுப்பிக் கொள்ள இயலும். இதர நிறுவனங்கள் இதே ஆஃபரை ரூ.200க்கு அதிகமான கட்டணத்தில் அறிமுகம் செய்துள்ளது. ரூ. 229க்கு வோடபோன் நிறுவனமும், ரூ. 249க்கு ஏர்டெல் நிறுவனமும் அறிமுகம் செய்து வைத்துள்ளது.
டெக்னாலஜியில் கலக்கும் 103 வயது டெக் ட்யூட் இவர் தான்